| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2444 | நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் – தரித்து இருந்தேன் ஆகைக்காக-பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்- 63 | தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர், விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது. | தாராகணம்,Thaarakanam - நக்ஷத்ரகணங்களினுடைய போர்,Por - (சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை விரித்து உரைத்த,Virithu Uraitha - (ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும் வெம் நாகத்து உன்னை,Vem Naagathu Unnai - (பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை தெரித்து,Therithu - அநுஸந்தித்தும் எழுதி,Ezhuthi - எழுதியும் வாசித்தும்,Vaasiththum - (எழுதினவற்றைப் படித்தும்) கேட்டும்,Kaettum - (ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும் வணங்கி,Vanangi - நமஸ்காரம்பண்ணியும் வழிபட்டும்,Vazhipattum - உபசாரங்களைச் செய்தும் பூசித்தும்,Poosiththum - பூஜித்தும் போது போக்கினேன்,Podhu Pookkinen - காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்) தரித்திருந்தேன் ஆகவே,Thariththirundhen Aagave - ஸத்தை பெறுவதற்காக. |