திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2449 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2449நான்முகன் திருவந்தாதி || யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் – அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது- 68
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு.
பதவுரை Show / Hide
நமனும்,Namanum - யமனும்
தன் தூதுவரை,Than Thoodhuvarai - தனது சேவகர்களை
கூவி,Koovi - அழைத்து
செவிக்கு,Sevikku - (அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்,Thiruvadi Than - ஸர்வேச்வரனுடைய
நாமம்,Naamam - திருநாமத்தை
மறந்தும்,Marandhum - மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்,Puram Thozhaamanthar - தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பெல் மின் கண்டீர்,Thirampel Min Kandheer - (ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி,Irainji - வணங்கி
சாதுவர் ஆய்போதுமின்கள் என்றான்,Saadhuvaar Aaypodhuminngal Endraan - (கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திகக்கடவீர்கள் என்று சொன்னான்.