திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2450 | நான்முகன் திருவந்தாதி || செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம் பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்- கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் – 69 | செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான். | பதவுரை Show / Hideசெவிக்கு இன்பம் ஆவதுவும்,Sevikku Inbam Aavadhuvum - கர்ணாமிருதமாயிருப்பதும் செம் கண்மால் நாமம்,Sem Kanmaal Naamam - புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே புவிக்கு,Bhuvikku - பூமியிலுள்ள ரெல்லார்க்கும் புவியும் அதுவே,Bhuviyum Adhuvae - (நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே கவிக்கு நிறைபொருள் ஆய்நின்றானே,Kavikku Niraiporul Aayninraan - பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை நேர்பட்டேன்,Nerpatten - தெய்வாதீனமாக அடையப்பெற்றேன், பார்க்கில்,Paarkkil - ஆராய்ந்து பார்த்தால் மறை பொருளும் அத்தனையே தான்,Marai Porulum Aththanaiye Thaan - வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே. |