திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2453 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2453நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் – இவ் வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் – நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும் என்னச் சொல்லுகிறார் –என்றுமாம்- 72
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும், சொல்லற மல்லனவும் சொல்லல்ல – நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே யாவதீ தன்றென்பா ரார்.
பதவுரை Show / Hide
இல்லறம் என்னும் சொல்லும்,Illaram Ennum Sollum - க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்மயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும் (- (முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு))
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
இல்லேல்,Illeel - அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்,Thuravaram Ennum Sollum - ஜ்ஞாநயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
இல்லேல்,Illeel - அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்,Allana Aram Ennum Sol - (பக்தியோகம் தேசவாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
நல் அளம் ஆவனவும்,Nal Alam Aavavanum - நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்,Naal Vedam Maa Thavavum - நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது,Naaranane Aavathu - ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பன வாகின்றன.
ஈது,Eethu - இவ்வுண்மையை
அன்று என்பார் அது,Andru Enbar Adhu - மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது.