திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2456 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2456நான்முகன் திருவந்தாதி || ஏவம்விதமான ஸ்ரீ எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்- 75
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் – பூக்கொண்டு வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு.
பதவுரை Show / Hide
தீக்கொண்ட செம் சடையான்,Theekonda Sem Sadaiyaan - நெருப்புப்போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக,Nalam Aaga - தகுதியாக
என்றும்,Endrum - எந்நாளும்
பூ கொண்டு,Poo Kondo - புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று,Pin Sendru - அநுஸித்து
வல்ல ஆறு,Valla Aaru - தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த,Aetha - துதிக்க
மகிழாத,Maghilaadha - (இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்,Vaikundham Selvanar - ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு,Sae Adi Mael Paatu - திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு,Naak Kondo - நாவினால்
மானிடம்,Maanidam - மனிதர்களை
பாடேன்,Paadeen - பாடமாட்டேன்