| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2464 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று – தரிக்க மாட்டாதே இருக்கும் – சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்- இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –என்றுமாம்- 83 | வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், – சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும், பின்னால்தான் செய்யும் பிதிர். | நேமியான்,Nemiyaan - திருவாழியாழ்வானை யுடையவனும் மால் வண்ணன்,Maal Vannan - வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான் சார்ந்தவர்க்கு,Saarndhavarukku - தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில் வேந்தர் ஆய்,Vendar Aay - அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய் விண்ணவர் ஆய்,Vinnavar Aay - தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய் மாது ஆய்,Maathu Aay - தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய் மற்று எல்லாம் ஆய்,Mattru Ellam Aay - மற்றுமுள்ள எல்லாவகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்) ஆற்றான்,Aatran - ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்) விண் ஆகி,Vin Aagi - ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய் தண்ணளி ஆய்,Thannali Aay - அருள் செய்பவனாய் மாந்தர் ஆய்,Manthar Aay - மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய் பின்னால்,Pinnaal - இவ்வளவுக்குமேலும் தன் கொடுக்கும்,Than Kodukkum - தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன் தான் செய்யும் பிதிர்,Thaan Seyyum Pithir - (இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம் |