திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2465 | நான்முகன் திருவந்தாதி || ருத்ரனும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்- அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் — 84 | பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். | பதவுரை Show / Hideஅதிரும் கழல் கால,Adhirum Kazhal Kaala - ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள மனன்னை,Manannai - ராஜாதிராஜனான கண்ணனையே,Kannanaie - கண்ணபிரானையே நாளும்,Naalum - எந்நாளும் தொழ,Thozha - தொழும்படியாக காதல்,Kaadhal - ஆசைப்படுவதையே தொழில்,Thozhil - நித்ய கருமமாக பூண்டேன்,Poondhen - ஏற்றுக்கொண்டிருக்கிற நான் பிதிரும் மனம் இலேன்,Pithirum Manam Ileen - (விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்,Pinjagan Thannodu Edhiravan - (ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்) அவன் எனக்கு நேரான்,Avan Enakku Neraan - அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான். |