திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2466 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2466நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் – மற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்- எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த- 85
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, வில்லாளன் நெஞ்சத் துளன்.
பதவுரை Show / Hide
கழி சினத்த,Kazhi Sinath - மிகக்கோபத்தை யுடையவனும்
வல்லாளன்,Vallalan - மிக்க வலிமையுடையவனும்
வானார் கோன்,Vaanar Kon - குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி,Vaali - வாலியினுடைய
மதன்,Madhan - மதத்தை (கொழுப்பை
அழித்த,Azitha - தொலைத்த
வில் ஆளன்,Vil Aalan - சார்ங்கவில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து,Nenjaththu - எனது நெஞசிடத்து
உளன்,Ulan - எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு,Enakku - (அந்த இராமபிரானுடைய திருக்குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்,Thozhil - நித்யகருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த,Thollai Maal Than Naamam Aetha - புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு,Enakku - (உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே,Mattrathuve - கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்,Pozhudhu Podhum - போதுபோகும்.