| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2467 | நான்முகன் திருவந்தாதி || ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் – அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன் நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்- 86 | உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய் தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும், என்னொப்பார்க் கீச னிமை. | நல் நெஞ்சை,Nal Nenjai - எனக்குப் பாங்கான மனமே! உத்தமன்,Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான் உளன் கண்டாய்,Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண் தன் ஒப்பான்,Than Oppaan - (தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான் தமியேற்கு,Thamiyerku - ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும் என்றும் உளன் கண்டாய்,Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க. உள்ளுவார் உள்ளத்து,Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே உளன் கண்டாய்,Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன் காண் என் ஒப்பார்க்கு,En Oppaarkku - என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும் தான் ஈசன் ஆய் உளன் காண்,Thaan Eesan Aayi Ulan Kaan - தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண் இமை,Imai - இதனை அறி. |