| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2471 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள் ஸ்ரீ திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் – ஸ்ரீ பகவானை ஆராதித்தவர்கள் விண்ணாள்வர் -என்றபடி- விலஷணமான ஸ்ரீ பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார் ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து- அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் 90 | வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான் பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே தாழா யிருப்பார் தமர். | விண்,Vin - பரமபதத்தில் வீற்றிருந்து,Veettrirundhu - பெருமை பொலிய இருந்து ஆள வேண்டுவார்,Aala Venduvar - ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள் வேங்கடத்தான் பால்,Vengadaththaan Paal - திருவேங்கட முடையான் பக்கலில் பல் மலர்கள்,Pal Malargal - பலவகைப்பட்ட மலர்களை திருந்த,Thirundha - நன்றாக வைத்தாரே,Vaiththaare - ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை) வரும் மதி பார்த்து,Varum Mathi Paarththu - (எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து அன்பினர் ஆய்,Anbinar Aay - பக்தியை யுடையவர்களாய் மற்றவற்கே,Mattravarkke - அந்த எம்பெருமானுக்கே தாழ்வு ஆய் இருப்பார்,Thaalvu Aay Iruppaar - அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு தமர்,Thamar - அடிமைப்பட்டவர்கள் மேல் திருந்த வாழ்வார்,Mel Thirundha Vaazhvaar - முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம். |