திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2473 | நான்முகன் திருவந்தாதி || நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி ஸ்ரீ எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் – கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-ஸ்ரீ எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் – என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே 92 | என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை – என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. | பதவுரை Show / Hideகரு இருந்த நாள் முதலா,Karun Irundha Naal Mudhala - (நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி காப்பு,Kaappu - (எம்பெருமானாலே) ரக்ஷைபெற்றவனாகையாலே திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு,Thiru Endrum Irundha Marvan Siritharanukku - பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு ஆள் ஆய்,Aal Aay - ஆட்பட்டவனாய் நெடு மாலை,Nedu Maalai - (அந்த) ஸர்வேச்வரனை என் நெஞ்சத்து,En Nenjaththu - என்னுடைய ஹ்ருதயத்திலே வைத்து,Vaiththu - ஸ்தாபித்து நின்றும் இருந்தும் என்றும்,Nindrum Irundhum Endrum - நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும் மறந்தறியேன்,Marandharieen - மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன். |