| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2474 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் ஸ்ரீ எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் – ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான சம்பந்தத்தை யுடையவனே இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார் 93 | காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், – ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். | அங்கு,Angu - அந்தப் பிரளய காலத்தில் பல் உயிர்க்கும்,Pal Uyirkkum - எல்லா ஆத்மாக்களுக்கும் ஆப்பு ஒழியவும்,Aappu Ozhiyavum - சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்) ஆக்கை கொடுத்து,Aakkai Koduthu - சரீரங்களைக் கொடுத்து அளித்த,Alitha - அருள்செய்த கோனே,Kone - ஸ்வாமிந்! காப்பு,Kaappu - (நீ செய்தருளும்) ரக்ஷைணை மறந்தறியேன்,Marandharieen - ஒருநாளும் மறக்கமாட்டேன் கண்ணனே என்று இருப்பன்,Kannane Endru Iruppan - எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன் குணம்,Gunam - திருக்குணங்களினால் பரனே,Parane - சிறந்த பெருமானே! மெய் தெளிந்தார் தாம்,Mei Thelindhaar Thaam - உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள் உன்னைவிட துணியார்,Unnaividha Thuniyaar - உன்னை விட மாட்டார்கள். |