Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2478 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2478திருவிருத்தம் || ஆழ்வார் தம்முடைய ஞானக் கண்ணுக்கு இலக்கண எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் இனி யாம் உறாமை -பன்மையிலும் – அடியேன் -ஒருமையில் -பர அநர்த்தம் நெஞ்சில் படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார் – 1
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
உயிர் அளிப்பவன், Uyir Alippavan - எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய், Nindra Yoniyum Aay - பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய், Pirandhai - திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா, Imaiyor Thalaivaa - தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும், Poi Nindra Naanamum - பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும், Pollaa Ozhukkamum - தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும், Azhukku Udamum - அசுத்தங்களோடு கூடின சரீரமும் (ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை, I Nindra Neermai - இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம், Adiyen Seyyum Meiya Vinnappam - (உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய், Nindru Kaettarulai - நின்று நீ கேட்டருள வேணும்.