Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருவிருத்தம் (101 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருவிருத்தம் - தனியன் || (கரு விருத்தக்குழி) 32
கரு விருத்தக்குழி நீத்த பின் காமக் கடுங்குழி வீழ்ந்து
ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த
திருவிருத்தத் தோரடி கற்று இரீர் திருநாட்டகத்தே
Karu, கரு - கர்ப்பஸ்தாநமாகிற
Virutha, விருத்த - விருத்தமான (ஹேயமான)
Kuzhi, குழி - பள்ளத்தில் நின்றும்
Neetha pin, நீத்தபின் - நழுவினபின்
Kaamam, காமம் - காமமென்கிற
Kadum, கடும் - க்ரூரமான
Kuzhi, குழி - பள்ளத்தில்
Veezhndhu, வீழ்ந்து - விழுந்து (பிறகு)
Oru virutham, ஒரு விருத்தம் - ஒரு கார்யத்திற்கும் யோக்யதையில்லாத கிழத்தனத்தை
Pukku, புக்கு - அடைந்து
Uzhaluvir, உழலுறுவீர் - திரிகிற ப்ராணிகளே
Uyirin, உயிரின் - ஜீவாத்மாவாகிற
Porulkatku, பொருள்கட்கு - வஸ்துக்களுக்கு
Oru mirutham, ஒருமிருத்தம் - ஒரு துர்நடத்தையும்
Pukuthamal, புகுதாமல் - சேராமற்படிக்கு
Kurugaiyarkon, குருகையர்கோன் - திருநகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வார்
Uraitha, உரைத்த - அருளிச்செய்த
Thiruviruthathu, திருவிருத்தத்து - திருவிருத்தமென்கிற திவ்யப்ரபந்தத்தில்
Oradi, ஓரடி - ஒருபாதத்தை
Katru, கற்று - அப்யஸித்து
Thirunattakathu, திருநாட்டகத்து - ஸ்ரீவைகுண்டத்தில்
Ireer, இரீர் - (நிஸ்சிந்தராய்) இருங்கோள்
2478திருவிருத்தம் || ஆழ்வார் தம்முடைய ஞானக் கண்ணுக்கு இலக்கண எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் இனி யாம் உறாமை -பன்மையிலும் – அடியேன் -ஒருமையில் -பர அநர்த்தம் நெஞ்சில் படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார் – 1
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
உயிர் அளிப்பவன், Uyir Alippavan - எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய், Nindra Yoniyum Aay - பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய், Pirandhai - திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா, Imaiyor Thalaivaa - தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும், Poi Nindra Naanamum - பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும், Pollaa Ozhukkamum - தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும், Azhukku Udamum - அசுத்தங்களோடு கூடின சரீரமும் (ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை, I Nindra Neermai - இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம், Adiyen Seyyum Meiya Vinnappam - (உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய், Nindru Kaettarulai - நின்று நீ கேட்டருள வேணும்.
2479திருவிருத்தம் || தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் – நாயகிக்கு உண்டான வை லக்ஷண்யத்தைத் தோழியானவள் கண்டு ஆச்சர்யப்பட்டு பேசுகிறாள் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வாருக்கு உண்டான அன்பு மிகுதியால் கண் கலக்கத்தைக் கண்டு பகவத் விஷயத்திலே இப்படியும் ஒரு அபி நிவேசம் உண்டாவதே என்று வியப்புற்ற பாகவதர்கள் வார்த்தை 2
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன், Muzhu Neer Mukil Vannan Kannan - நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே, Moodhuvar Aam Vinnattavar Thozhneer Inai Adikke - (யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய, Anbu Soottiya - தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு, Sool Kuzharku - அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து, Sezhuneer Thadathu - மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல், Kayal - கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப, Milirndhaal Oppa - பிறழ்ந்தாற் போல
சே அரி கண், Sae Ari Kann - சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப, Azhuneer Thulumb - (நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன, Alamarugirathin - தடுமாறுகின்றன;
வாழி, Vaazhi - இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)
2480திருவிருத்தம் || கருடாரூடனாக சேவை சாதிக்க -பெரிய திருவடி செய்த போக்யமே போக்யம்–சதா திருமாலை ஏந்திச் செல்கிறான் என்று ஆழ்வார் திரு உள்ளம் பெரிய திருவடி பின்னே பரம பதம் வரை சென்று -பிராட்டிமார் உடன் சேர்த்தி அழகைக் கண்டு மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பதைக் கண்ட பின் —தொடருவதால் அவனது குளிர்ச்சிக்கு காரணம் என்பதாலும் நிழல் தம்மில் ஒருவர்க்கு ஒருவர் நிழல் என்றுமாம் – அடியார்க்கு நிழல் போல்வனர் என்றுமாம் — 3
குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து, Azhai Pol Adum Chakrathu - (அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல், Annal - எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும், Vinnor Thozha Kadavum - மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த, Thazhal Pol Sinath - பள்ளின் பின்போன
தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர், Kuzhalkovalar - புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும், Madham Pavaiyum - குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும்
திருவும், Thiruvum - பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர், Nizhal Polvannar - (எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல், Kandu Nirkol - பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல், Meelum Kol - திரும்பி வருமோ?
2481திருவிருத்தம் || அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -பிராமண பூர்வகமாக எம்பெருமான்  பின் சென்று தளர்ந்து இருக்கும் பொழுது- தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது -என்று அத்தையே ஸ்திரப்படுத்தி அருளி குளிர்ந்த காற்றும் அவன் திருத் துழாய் -சம்பந்தம் கொண்டு நலியும் படியை சொல்லி – பாக்ய பதார்த்தங்கள் இனி தம்மை ஹிம்சிப்பதை வெளியிட்டு அருளுகிறார் 4
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
தனி நெஞ்சம், Thani Nenjam - (என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன், Mun - முன்னமே
அவர் புள்ளே, Avar Pulle - அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது, Kavarnthathu - (பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று. (ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaikku - (அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது, Kavarnthathu - கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம், Nenjam - வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம், Ini Ingu Yaam Ilam - இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர், (அப்படியிருக்க.)
முனி, Muni - கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி, Vanjam Paeychchi - வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை, Mulai - (விஷந்தடவின) முலையை
சுவைத்தான், Suvaiththan - (பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய், Mudichoodum Thuzhai - திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே, Pani Nanjam Maruthame - குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே, Nee Nadhuvae - நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு, Emmathu Aavi Panippu - (ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே, Iyalthae - (உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)
2482திருவிருத்தம் || மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் – என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர – மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் -வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே 5
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே
பனிப்பு இயல்பு ஆக உடைய, Panippu Iyalthbu Aaga Udaiya - குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றானது
இ காலம், I Kaalam - இப்போது மாத்திரம்
இ ஊர், I Oor - இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து, Panippu Iyalthbu Ellam Thavirthu - குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய், Am Thannam Nuzhai - அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக (ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும், Pani Puyal Soorum - மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும், Eri Veesum - வெப்பத்தை வீசுகின்றது; (இவ்விதமாக)
பனி புயல் வண்ணன், Pani Puyal Vannan - குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல், Sengkol - (என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது, Oru Naantru Thadaviya - இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி, Thada Kanni - பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும், Maamai Thirathu Kollum - மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்
2483திருவிருத்தம் || ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவருக்கு வசப்படாமல் தப்பித் பிழையுங்கோள்-என்று பாகவதர்கள் ஆழ்வார் பிரபாவம் சொல்கிறார்கள் – அனைவரும் ஸ்வதந்தர்களாக இல்லாமல் அநந்யார்ஹர் ஆவார்கள் பிரசித்த மன்மதன் மிருத்யுவைத் தப்பினாலும் -இப்படி மிருதுவாய் தோன்றினாலும் இவருக்கு தப்ப முடியாதே 6
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
இது, Idhu - இவ்வடிவானது
தடாவிய, Thadaviya - வளைந்த
அம்பும், Ambum - பாணங்களையும்
முரிந்த, Murindha - ஒடிந்த
சிலைகளும், Silaigalum - விற்களையும்
போக விட்டு, Poga Vittu - கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு, Kadayin Kondu - உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும், Valli Ennum - ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க, Asurar Manga - அஸுரர்கள் அழியும்படி
கடாவிய, Kadaviy - ஏறி நடத்தப்படுகின்ற
வேகம், Vegam - விரைவையுடைய
பறவை, Paravai - பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன், In Paagan - இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன், Madhanan - மன்மதனுடைய
செங்கோல், Sengkol - ஆளுகையை
நடாவிய, Nadaviya - நடத்துகிற
கூற்றம், Koottam - யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே, Naalath Thulle - இந்நில வுலகத்திலே
கண்டீர், Kandeer - (இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள், Uyir Kaaminngal - (உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்
2484திருவிருத்தம் || கால மயக்கு – காலம் மறைத்து உரைத்தல் இது என்பர் திருக்கோவையாரில் 7
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ஞாலம் பனிப்ப, Njaalam Panippa - உலகம் நடுங்கும்படி
செறித்து, Seriththu - தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு, Nal Neer Ittu - (தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து, Kaal Sithaindhu - கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு, Neelam Val Aeru - கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற, Poraa Nindra - போர் செய்யப் பெற்ற
வானம் இது, Vaanam Ithu - ஆகாசமாகும் இது;
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
கோலம் சுமந்து, Kolam Sumandhu - வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு, Pirindhaar Kodumai Kuzhru - பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ, Than Poo Kaalam Kol O - குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன், Vinaiyaattiyeen - தீவினையுடைய நான்
காண்கின்ற, Kaankindra - காண்கின்றவற்றை
அறியேன், Ariyyeen - இன்னதென்று அறிகிற வில்லை.
2485திருவிருத்தம் || பொருள் வயின் -நிமித்தமாக -பிரிவு துறை பரிபூர்ண உத்தம புருஷன் தலைமகனாய் இருக்க-தேசாந்தத்துக்குப் -பொருள் தேடிப்போக வேணுமோ ஸ்வ ஆர்ஜித பொருள்கள் கொண்டே பித்ரு தேவ கார்யங்கள் செய்து அவர்களுக்குப் ப்ரீதி ஏற்படுத்த வேணுமே 8
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
குன்றம் நாடர், Kundram Naadar - மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள், I Naal - இன்றை தினத்தில்
பயில்கின்றன, Payilkindrana - பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும், Kaankindranaagalum - காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும், Kedkindraangalum - கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில், Kaanil - ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண், Paan - வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம், Idhu Ellam - இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி, Maan Kuntram Aendhi - மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து, Than Maamalai Vengadathu - குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும், Umbar Nambum - மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று, Sendru - போய் அடைந்து
பொருள் படைப்பான், Porul Padaippaan - (அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற, Katra - (புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு, Thinnalavu - வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம், Arindhom - தெரிந்து கொண்டோம்.
2486திருவிருத்தம் || கையும் திருவாழியுமான சேர்த்தியால் உண்டான அழகுடன் ஸ்ரீ வைகுண்டம் போலே சேர்ந்தவர் மீள ஒண்ணாத எல்லை இல்லா ஆனந்தம் கொடுக்கும் பராங்குச நாயகி 9
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
திண், Thin - வலிய
பூ, Poo - அழகிய
சுடர், Sudar - ஒளியுள்ள
நுதி, Nuthi - கூர்மையை யுடைத்தான
நேமி, Nemi - திருவாழியை யுடைய
அம் செல்வர், Am Selvar - அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய, Vin Naadu Anaiya - பரமபதத்தை யொத்த
வண் மணி பூ, Van Mani Poo - அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை (ஏனெனில்;)
இவையோ கண், Ivaiyo Kan - இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம், Poo Kamalam - தாமரை மலர்களாய்
வண் பூ குவளை, Van Poo Kuvalai - அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ், Maa Idazh - பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி, Karud Sudar Aadi - கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி, Ven Muthu Arumbi - (நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற, Madamaan Vizhikkindra - மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.
2487திருவிருத்தம் || தோழியை சில வார்த்தைகள் சொல்லி உடன்பட வைக்கின்றான் – மதி யை உடம்படுத்தல் -துறை 10
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே
மாயோன், Maayon - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட, Vadathiruveengadam Naad - வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள், Valli Kodikaal - பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி, Adhu Andri - அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும், Vallinaiyenum Kiliyum Elgum - கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ, Aayo - (உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ, Thondaiyo - கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர், Noi O Uraikkilum Kaetkindraileer - (என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
அடும், Adum - (என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது, Idhu Arivu Aridhu - இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர், Uraiyeer - நீங்கள் சொல்லுங்கள்; (அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)
2488திருவிருத்தம் || இதுவரையில் நான் எத்தனையோ ஆச்சர்யங்கள் கண்டு இருக்கிறேன் ஆனால் இன்று காணும் ஆச்சர்யம் என்றைக்கும் காண முடியாது என்று அடங்கா வியப்புத் தோற்ற பாசுரம் தொடங்கும் போதே அரியன யாமின்று காண்கின்றன— இது போன்ற அதிசயம் முன்பு எங்கும் கண்டேன் இல்லையே -என்கிறான் மேல் முழுவதும் இந்த ஆச்சர்யத்தை விவரிக்கின்றான்- 11
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே
யாம் இன்று காண்கின்றன, Yaam Indru Kaankindrana - நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன, Ariyan - (உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய், Kannan Vin Anaiyai - எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு, Periyan Kaadham Pirivu - அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ, Porutko - பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என, En - என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க (அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன, Njaalam Eydharku Uriyan - எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன, Oro Kudangaip Periyan - தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை, Kendai Kulam Ivai - கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி, Ol Muththum Pai Ponnum Aendhi - (பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
வந்து பேர்கின்ற, Vandhu Paerkindra - (என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ, O - இது என்ன வியப்பு!.
2489திருவிருத்தம் || நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றாமையைக் கூறி நெஞ்சோடு கலாய்த்தல் அன்றியே பாங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையை சொல்லுகிறாள் ஆகவுமாம் 12
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே
மணி மாமை, Mani Maamai - (எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது, Paerkindrathu - விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை, Pirangi Allal Payalai - விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது, Oorkindrathu - மேன் மேல் பரவா நின்றது;
கங்குல், Gangul - இராப் போது
ஊழிகளே, Oozhigalai - அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே, Idhu Ellam Inave - இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து, Eerkkindra Chakkarathu - (கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன், Emperumaan Kannan - எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற, Saarkindra - ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார், Nal Nenjinnaar - (எனது) நல்ல மனம்
தந்து போன, Thandu Poana - (தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே, Thani Valame - ஒப்பற்ற செல்வங்களாம்.
2490திருவிருத்தம் || நாயகனைப் பிரிந்து ஆற்ற மாட்டாத நாயகி இருளுக்கும் வாடைக்கும் கஷ்டப் பட்டுக் கூறும் பாசுரம் இது இந்திரியங்கள் பகலிலே பகலிலே பலவகைப்பட்ட பொருள்களை நாடி இருக்கக் கூடி இருக்குமாதலால் நாயகன் பிரிவை ஒரு விதமாக ஆறி இருக்கலாம் இரவில் மனம் அவனையே நாடி இருப்பதாலும் கலவிக்கு உரிய காலமாதலாலும் இராப்பொழுதிலே ஆற்ற மாட்டாது இருப்பது இயல்பே இப்பராங்குச நாயகியும் அவ்வாறே வருந்துகிறாள் என்க 13
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
தனி வளர், Thani Valar - ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல், Sengkol - (தனது ஒளியாகிய) அரசாட்சியை
ஈடாவு, Eedaavu - (எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு, Thazhaivai Arasu - வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய, Aviya - ஒழிய
பனி வளர் செங்கோல் இருள், Pani Valar Sengol Irul - (ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும், Paar Muzhuvadhum - பூமி முழுவதும்
வீற்றிந்தது, Veetrindhadhu - அரசு வீற்றிருந்தது;
இனி, Ini - இனி மேல்,
நுனி வளர் காதல், Nuni Valar Kaadhal - துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை, Thuzhaai - (தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு, Thuzhaavu - அளைந்து வருகிற
தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றை
தடிந்து, Thadinthu - தண்டித்து (அழித்து)
வளை, Valai - (பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர், Kaappavar - கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர், Aar - யாருளர்? (எவருமில்லை.)
ஊழிகள், Oozhigal - (கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை, Enai - என்னை
ஈர்வன, Eirvan - விளக்குந்தன்மையுடையன.
2491திருவிருத்தம் || நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடி -நலம் பாராட்டு துறையில் அருளிச் செய்தது மூன்று காரணங்கள் அழகிலே ஈடுபட்டு பேசுவது விஸ்லேஷத்தில் தன்னுடைய தரிப்புக்கு நம்மைப் பிரிந்து நெடும்காலம் இருக்க மாட்டாமல் கடுக வந்திடுவார் என்று உணர நாயகியின் கண் அழகிலே ஈடுபட்டுப் பேசும் பாசுரம் இது 14
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே
ஈர்வனவேலும், Eirvanvelum - (பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும், Am Selum - அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை, Ivai - இவை
உயிர்மேல் மிளிர்ந்து, Uyirmeel Milirndhu - (எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல, Pervanavo Alla - (அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம், Deivam - தெய்வத் தன்மையை யுடைய
நல், Nal - அழகிய
வேள், Vel - மன்மதனுடைய
கணை, Kanai - அம்புகளினுடைய
பேர் ஒளிய, Per Oliya - சிறந்த ஒளியையே
சோர்வன, Sorvan - தாம் வெளியிடுவன
நீலம், Neelam - நீலமணியினுடைய
சுடர், Sudar - ஒளியை
விடு, Vidu - வீசுகின்ற
மேனி, Meni - திருமேனியை யுடையனான
அம்மான், Amman - எம்பெருமானது
ஊர் விசும்பு, Oor Visumbu - திருநாடாகிய பரமபத்தை
தேர்வன, Thervan - (தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல், I Sezhu Kayal - கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ, Deivam Annira Kannno - (மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ, Kannno - கண்களோ?
2492திருவிருத்தம் || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவதாரிகை- இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து கிட்ட கடவதாக குறி வர விட்டு போய், கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே கிட்டினவன்,,இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண, அவர்களும் அத்தை கொண்டு,இவர் வருவதாக போன படிக்கும்,வந்த படிக்கும், இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்.. இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே ,ஆனை வேட்டையை வினவி கொண்டு, செல்ல கடவதாக நினைக்கிறான்,.. பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே , இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்- 15
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
களிறு வினவி, Kaliru Vinavi - யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;, Kayalo Numa Kangal Endru Nitrir - ‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும், Ayalor Ariyilum - அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை, Eethu Enna Vaarthai - இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த, Kadal Kavarndha - கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம், Puyalodu Ulaam - மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல், Kondal - காளமேகம் போன்ற
வண்ணன், Vannan - (குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து, Punam Vengadathu - (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல, Kollai Kaakkinra Naalum Pala Pala - (நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர், Emmodum Payalo Ilir - எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.
2493திருவிருத்தம் || நாயகனோடு கூடி இருந்து பிறகு விதி வசத்தால் பிரிந்த நாயகி -அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய் இராப்பொழுதைக் கடக்க மாட்டாமையைத் தோழிக்கு உரைக்கிறாள் நித்ய சம்ஸ்லேஷ அபி நிவேசத்தை வெளியிட்ட படி அன்றிக்கே கலந்த ஸம்ஸ்லேஷத்தின் தன்மையைத் தோழி வினவ பிரிந்த போது காலம் நெடுக்குவது போல் கூடிய பொது காலம் குறுகின படி என்னே என்று கலவியின் சிறப்பைச் சொன்னபடி – நீங்கில் ஊழியாயிடும் -கூட்டில் நாழிகை கூறாயிடும் -என்று மாறிச் சென்று அந்வயிப்பதால் எதிர் நிரல் நிறைப்பொருள் கோள் மொழி மாற்று நிரல் நிறை மயக்க நிரல் நிறை –என்பதுவும் இதுவே 16
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே
கண்ணன் விண் அனையாய், Kannaan Vin Anaiyaai - எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம், Pala Pala Vazhigal Aayiram - (நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி, Andri - அதுவல்லாமல் (நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும், Oru Naazhikayai Palapala Koordu Ittu Koordu Aayidum - ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர், Anbar - நாயகர்
பல பல நாள் கூடினாலும், Pala Pala Naal Koodinaalum - பல பல நாள் கூடிநின்றாலும் (காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும், Yaam Melithum - யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும், Anbar Pala Pala Naal Neenginaalum - (நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்), Kaalam Mika Valarthal - (காலம் மிக வளர்தலால்)
யாம் மெலிதும், Yaam Melithum - யாம் மிக வருந்துகிறோம்; (ஆதலால்)
இ பாய் இருள், I Paai Irul - இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து, Pala Pala Soozhal Udaithu - சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து, Pala Pala Soozhal Udaithu - அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)அந்தோ! வாழ்க.
2494திருவிருத்தம் || முன்பு ஸ்ரீ ராமபிரான் வனவாசம் யாத்ரை புறப்பட்ட பொழுது உடன் சென்ற அயோத்யா நகர ஜனங்கள் அறியாத படி தேர் ஏறிச் சென்றால் போல் இங்கு மறைத்துப் போகாமல் போன வழி தெரியும் படி போனதே இவ்விடத்துக்கு வாசி – 17
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே
இருள விரி, Irula Viri - இருளை வெளியுமிழ்கிற
நீலம், Neelam - நீலரத்தினம் போன்ற
கரு, Karuv - கருமை நிறமுடைய
ஞாயிறு, Nyaayiru - ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல், Sudar Kaalvathu Pol - ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள், Irul Viri Sothi Porul - கருமை நிறம்
அரவணைமேல், Aravanaimeel - சேஷ சயனத்தின்மேல்
உறையும், Urayum - நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே, Eri Kadaley - அலை வீசுகிற கடலே!
வாழி, Vaazhi - வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன, Irul Virindhaal Anna - இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு, Maa Neer Thirai Konda - கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல், Irul Pirindhaar Anbar Ther Vazhithooral - இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக
2495திருவிருத்தம் || ஸ்ரீ நம்பிள்ளை அவதாரிகை கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்து போனானாய் -முக்காலமும் வந்து இவன் வாராது ஒழிய – அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக் கண்டு தோழியானவள் அவன் வரும் அளவும் இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் - 18
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
கடல்கொண்ட, Kadal Konda - கடலளவினதான
கண்நீர் அருவி, Kannir Aruvi - கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும், Seyyaa Nirkum - செரிந்து நிற்கிற
காரிகையே, Kaarikaye - அழகிய நங்காய்!
வானம், Vaanam - ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது, Kadal Konda Ezhunthathu - கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல், Kadal - அக் கடல்தான்
அன்றி, Andri - (அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால், A Vaanaththai Sendru Kondu Ozhintha Adhanal - ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது, Idhu - இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும், Kannaan Mannum Vinnum - எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ, Kadal Kondo Ezhuntha Akalam Sol O - பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ, Puyal Kaalam Kol O - மழைக்காலந்தானோ? (அறியேன்.)
2496திருவிருத்தம் || செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை இன்ன காலத்திலேயே வருகிறேன் என்று சொல்லிப் போன நாயகன் வாக்குத் தவறிதற்கு ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்கு செவிலித்தாய் இரங்கல் அழகிய மணவாள சீயர் உரையில் பாங்கி பழிக்கு இரங்கின பாசுரம் என்பர் நம்பிள்ளையும் பெரிய வாச்சான் பிள்ளையும் தாய் பாசுரமாகவே வியாக்யானம் செய்து இருப்பதாலும் என் சின் மொழிக்கு -என்று தனது உடைமையாக கூறி உள்ளதாலும் தாய் பாசுரமாகவே கொள்ள வேண்டும் 19
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே
காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று, Kaarikayaar Niraikaapavar Yaar Endru - ‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி, Maari - மேகங்கள்
கார் கொண்டு, Kaar Kondu - கருமை நிறங்கொண்டு
இன்னே, Innae - இவ்வாறு
கை ஏறி, Kai Aeri - ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும், Arai Idum Kaalaththum - அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர், Saarikai Pullar - விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய், Am Thannam Thuzhai - அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார், Kooi Irai Arulaar - (இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை; (ஆகவே)
என் சில் மொழிக்கு, En Sil Mozhikku - சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது, Seyari Kai Aeri Mpalzi Aayi Vilainthathu - (அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
வாழியரோ, Vaazhi Yaro - இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.
2497திருவிருத்தம் || வெறி விலக்கு துறை பாசுரம் தீர்ப்பாரை யாம் இனி -திருவாய் மொழி பாசுரம் போல் உலகமுண்ட பெரு வாயனின் திரு நாமங்களை செவிப்படுமாறு சொல்வதும் அவன் திருத்துழாயைத் தருவதும் பரிஹாரம் இது தெய்வ நல் நோய் -என்கிறாள் தோழி 20
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே
சில் மொழி நோயோ, Sil Mozhi Noyoo - சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது, I Noy Inathu Endru Ilmozhi Kaetkuma In Deivam Andru Ithu - இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று, Illadha Mozhigalai Padaitthu Sollak Kaetkathakka Kshudhradeivaththin Vishayamaaga Vandhadhandru - இது
வேல, Vela - வெறியாட்டாளனே!
நீ நில், Nee Nil - நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே, Em Ammanaimeer Enathu Thaimaarkale - எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே
என் மொழி கேண்மின், En Mozhi Kainmin - (இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம், Kazhiperun Theivam - மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும், Ezhu Ulagum - எல்லாவுலகங்களையும்
உண்டான், Undaan - (பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு, Sol Mozhikondru - திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய், Maala Am Thannam Thuzhai - (அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின், Sootumin - (இவளுக்குச்) சூட்டுங்கள்
2498திருவிருத்தம் || தாமான தன்மையில் கிருஷ்ண அனுபவம் என்றே நம்பிள்ளை போல்வார் வியாக்யானித்து அருளுகிறார்கள் ஸ்நாநாசனம் அலங்காராஸனம் நித்ய விபூதியில் போஜ்யா ஸாஸனம் சயனா ஆஸனம் இங்கு தர்மி ஐக்யம் உண்டே 21
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
அங்கு, Angu - பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள், Vinnorkal - நித்யஸூரிகள்
நல் நீர் ஆட்டி, Nal Neer Aatti - நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க, Am Thoopam Tharaa Nirka - அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க, (அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால், Oru Maayaiyin Aal - (உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து, Eetiyavenney Thodu Unna Pothu - (இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள்தோறும் கடைந்து) சேர்ந்தவெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி, Thuyana Sootu Nal Maalaigal Aendhi - பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்கஅழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு, Adal Aayartham Kombinukku - வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்றமகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில், Imil - முசுப்பையுடைய
ஏறு, Eru - (ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை, Val Koon Kottidai - வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை, Koothu Aadinai - கூத்தாடி யருளினாய்.
2499திருவிருத்தம் || காந்தர்வ விவாஹ முறையினால் நாயகியைப் புணர்ந்து பிரிந்த நாயகன் பின்பு தோழியின் மூலமாக நாயகியைச் சேர விரும்பி அத்தோழியைத் தனியே கண்டு தான் கருத்தை வெளிப்படையாகக் கூறி வேண்டிக் கொள்ளாமல் குறிப்பாக கூறக் கருதி புனம் காக்கும் இடத்தில் தழையும் கண்ணியுமாக கையுறைகளை ஏந்திக் கொண்டு சென்று அவர்களை நோக்கி வேட்டை யாடுபவன் போல் எனது அம்போடு ஒரு மத யானை இவ்விடத்து வரக் கண்டது உண்டோ என்று வினவ அவனைப் பரிஹஸித்து தோழி நாயகியிடம் கூறும் பாசுரம் 22
கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதன தம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
ஐயர், Aiyar - இப்பெயரிவருடைய
கை, Kai - கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை, Kombu Ar Thazhai - மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம், Siru Naan Erivu Ilam - (இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்) தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு, Kondaadu - (இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை, Vettai - வேட்டையாம்;
வினவுவது, Vinavuvathu - (இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு, Ambu Ar Kaliru - (எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்; (இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதனை, Pun Oorum Kalvar Tham Paar Agathu Endrum Aadaadhana - கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினதுஉரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென, Thammil Koodaadena - தமக்குள் ஒன்றொடொன்று பொருத்தமில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ, Vambu Ar Vinaa Sollavoo - புதுமைமிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை, Emmai - நம்மை
இவ் வான் புனத்தே வைத்தது, Iv Vaan Punatthae Vaiththathu - இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைதத்து?
2500திருவிருத்தம் || கொல்லையைக் காத்துக் கொண்டு இருக்கும் நாயகியையும் தோழியையும் கண்டு நாயகன் தனது குறை வேண்டுதலைக் கூறும் துறை இது தம் மனம் இவர்களுக்கு வசப்பட்டத்தைக் குறிப்பால் கூறியவாறு நீங்கள் புனத்தை விட்டுப் போகாமல் இருப்பது போல் என் மனத்தை விட்டு நீங்குகிறது இல்லை புனம் போல் என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறது உங்கள் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ என் மனத்தைக் காக்கவோ புனக்காவலோடே நில்லாமல் என் மனம் காப்பது உங்களுக்குத் தகுதி அன்று – அவர்கள் அழகைத் தான் காணும் பொருட்டும் தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும் இவர்கள் அருகில் தடுமாறி திரிந்தமை தோற்ற புனத்தயலே வழி போகும் அரு வினையேன் என்கிறார் 23
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
மகளிர், Mahalir - பெண்களே!
நும் காவல், Num Kaaval - உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ, Punamo - இந்தத் தினைப் புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ, Punathu Aayale Vazhiy Pogum Aruvinaiyen Manamo - இப் புனத்தினருகிலே வழிச் செல்லுகிற பரவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர், Sollir - சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான், Pundareekathu Amkezh Vanam Oru Anai Kannaaan - செந்தாமரை மலரின் அழகிய ஒளியையுடைய காட்டைஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன், Kannan - கண்ணபிரானது
வான் காடு, Vaan Kaadu - பரமபதத்திலே
அமரும், Amarum - வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம், Deivathu Inam - நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய், Oru Anaiyeergal Aay - ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள், Num Iyalkugal - நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ, Ivaiyo - அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?
2501திருவிருத்தம் || பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது – எனது மகள் கண் கலக்கமுற்றாள் நெஞ்சம் அழியப் பெற்றாள் இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள் – 24
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம் கொல் எம் கோல வளைக்கே
இயல்பு ஆயின, Iyalthu Aayina - இயற்கையானதும்
வஞ்சம், Vanjam - பிறரறியாதபடியுள்ளதுமான
நோய், Noi - காதல் நோயை
கொண்டு, Kondhu - உடையவையாய்
உலாவும், Ulaavum - (ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும், Oru Kudangai Kayal Paayvan Peruneer Kangkal Thammoodum - ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய், Puyal Vaai - (முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால், Kundram Ondraal - கோவர்தன மலையினால்
இனம் நிரை காத்த, Inam Nirai Kaatha - பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி, Pul Oorthi - கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய், Kal Oorum Thuzhai - தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல், Koyal Vaai Malarmel - பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு, Manaththodu - மனத்தோடும்
எம் கோல் வளைக்கு, Em Kol Valaikku - அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?
2502திருவிருத்தம் || இவளை ரக்ஷிக்கா விடில் அவன் செங்கோலுக்கும் குறை ஆகாதோ – தலை மகள் வார்த்தை யாகவும் தாய் வார்த்தையாகவும் அவனே வாராமல் இருந்து தன் செங்கோலுக்கு வளைவை உண்டாக்கின பின்பு திருத் துழாய் என்ன செய்ய மாட்டாது என் வளை நிமித்தமாக இவனே அழிக்கத் தொடங்கினால் வேறே ரஷிப்பார் உண்டோ தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை அம்மான் -நம் கோன் உகக்கும் துழாய் – 25
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே
திறல் சேர், Thiral Ser - வலிமை பொருந்திய
அமரர் தம், Amarar Tham - தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய, Konudaiya - தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள், Thamkol - தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன், Umbar Ella Yavarkkum Thamkon - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள், Nam Kol - (இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும், Ugakkum - விரும்பித் தரித்துள்ள
துழாய், Thuzhai - திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ, Em Kolvalai Mudhal Aa - எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும், Kannaan Mannum Vinnum Alikkum Chengol Valaivu Vilaivikkum - அப்பெருமானது உபய விபூதியையும்பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி, Ini - இங்ஙனமான பின்பு,
நானிலத்து, Naanilathu - இவ்வுலகத்தில்
என் செய்யாது, En Seyyaadhu - (அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.
2503திருவிருத்தம் || நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம் 26
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே
நால்நிலம், Naalnilam - (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு, Vaikondru - (தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று, Nanneer Aramendru - ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட, Kothu Konda - அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன், Venil Am Selvan - வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ், Suvaithu Umizh - உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை, Palai - பாலை நிலத்தை
கடந்த, Kadandha - தாண்டி வந்த
பொன்னே, Ponne - பொன் போன்றவளே!.
விண்ணோர், Vinnor - மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும், Kaalnilam Thoyndhu Thozhum - (நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படிஇங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா, Kannan Vekha - கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது, Uthu - அடுத்துள்ளது.
அம் பூ தேன், Am Poo Then - அழகிய பூவையும் தேனையுமுடைய
இள, Ila - இளமை மாறாத
சோலை, Solai - சோலையானது
அப்பாலது, Appaaladhu - அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது, Eppalaikkum Semaththadhu - (எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.
2504திருவிருத்தம் || திருத் துழாய் மாலையை தரித்து -முன்பு நலிந்த வாடை இப்பொழுது தணிந்ததே – தலைவன் உடன் கலந்த அனுபவம் என்றுமாம் சேமம் செங்கோன் அருளே விசுவாசம் பிறக்கவே பகைவரும் நண்பர் ஆவார் அவன் குண விசேஷங்களில் ஆழ்ந்து உலக பொருள்கள் துன்பம் தவிர்ந்தமை சொல்கிறது 27
சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே
செம் கோன் அருளே, Sem Kon Arule - (எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம், Semam - நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும், Pandhu Ellam Arai Kooyi Yamangal Thoru Eri Veesum - முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று, Seruvaarum Natpu Aaghuvar Endru - பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற, Emam Pera - உறுதி பொருந்த
வையம் சொல்லும், Vaiyam Sollum - உலகத்தோர் கூறுகிற
மெய்யே, Meyye - உண்மைமொழியின் படியே,
அ வாடை, A Vadai - அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய, Nam Kannan Amthannam Thuzhai Thamam Punaia - நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது, Eetho Vandu Thanneerndathu - இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.
2505திருவிருத்தம் || 28
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன
வள்வாய் அலகால், Valvai Alagal - கூர்மையான வாயின் நுனியினால்
புள், Pul - பறவைகள்
நந்து உழாமே, Nandhu Uzhaame - (தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி
பொரு, Poru - அலைமோதுகிற
வளை கொள்வது, Valai Kolvathu - (எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம், Yaam - (உன்பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம், Izhappom - வளையை இழக்கிறோம்; (இப்படியிருக்க)
ஓர் வாடை, Oor Vadai - (எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே, Naduvae - இடையே பிரவேசித்து
நீர், Neer - காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா, Thiru Arangaa - ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும், Vannam Thuzhaavi Ulaavum - (எமது) நாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக்கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய், Arulai - (அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ, Pandhum Innanna Ulavoo - முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?
2506திருவிருத்தம் || நாயகி அன்னப் பறவையை வெறுத்து உரைக்கும் பாசுரம் -அன்னமோடு அழிதல் துறை 29
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே
குடிசீர்மை இல், Kudiseirmai Il - உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள், Annangal - இவ்வண்ணப் பறவைகள் (எனன் செய்கின்றனவென்றால்)
இவள், Ival - ‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு, Aal Attram Pattu - (வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது, Innanth Thoodhu - இப்படிப்பட்ட தூதராக
எம்மை, Emmai - நம்மை
இரந்தாள் என்று, Irandhaal Endru - குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா, Annanth Sollaa - அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும், Pedaidodum Poivarum - (தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன; (இதற்குக் காரணம்)
நீலம் உண்ட, Neelam Unda - நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன, Min Annan - மின்னல்போன்ற
மேனி, Meni - திருமேனியை யுடைய
பெருமான், Perumaan - எம்பெருமானுடையதான
உலகில், Ulagil - உலகத்தில்
பெண் தூது செல்லா, Pen Thoodhu Sellaa - பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ, Annanth Neermai Koloo - அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?
2507திருவிருத்தம் || எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும் அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறார் 30
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே
அன்னம் செல்வீரும், Annam Selveerum - (வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும், Vandaanam Selveerum - (அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன், Thozhudhu Irandhen - யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன் (என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ, Munnam Selveergal Maravenminoo - உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு, Kannan Vaikundhanodu - கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால், En Nenjinaraik Kandaal - (முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி, Ennaich Solli - (அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ, Avaridai Neer Innamm Sollirow - அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ, Idhu Thagavoo - இது தகுதியோ?
என்று இசைமின்கள், Endru Isaimingal - என்று சொல்லுங்கள்
2508திருவிருத்தம் || வானத்தில் பறந்து செல்லும் அன்னம் முதலியவற்றைப் பரமபத நாதனுக்குத் தூதாகவும் மேகங்களை திருவேங்கடமுடையான் இடம் தூது விடுகிறாள் 31
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அம்பொன், Ambon - அழகிய பொன்னும்
மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்களும்
திசை, Thisai - திக்குகள் தோறும்
மின் மிளிரும், Min Milirum - மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து, Thiruveengadathu - திருவேங்கட மலையினது
மேகங்கள், Megangal - மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால், Thuthu Isaimingal Endru Isaitthal - (நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம், Isaiyilam - (அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை, Valthal Simayam Misai - வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான், Min Miliriyap Povan - மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட, Vazhikonda - பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால், En Thalaimel Asaimingal Endraal - நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம், Asaiyum Kol Aam - (அவை அங்குச்) செல்லக் கூடுமோ?
2509திருவிருத்தம் || பொய்கையார் – மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் – கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் 32
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே
மேகங்களே, Megangalai - ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள், Thirumal Thirumeni Okkum Yogangal - எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர், Ungalukk Ev Aaru Pettrir - உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்;
உயிர், Uyir - உயிர்களை
அளிப்பான், Alippan - பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து, Nal Neergal Sumandhu - நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து, Maa Kangal Ellam Thirinthu - பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம், Num Tham - உங்களுடைய
ஆகங்கள் நோவ, Aakangal Nova - உடம்புகள் நோகும்படி
வருந்தும், Varundum - (அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம், Thava Aam - தபஸ்ஸோ
அருள் பெற்றது, Arul Pettrathu - (அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.
2510திருவிருத்தம் || 33
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே
அரவு அணையீர், Aravu Anaiyeer - ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால், Arul Aar Thiru Chakkaraththal - கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும், Akal Vichumbum - பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும், Nilanum - மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட, Irul Aarvinai Keda - இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி (துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர், Chengol Kadaavudheer - உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர். (அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய
மாமை, Maamai - மேனி நிறத்தை
சிதைக்கின்றது, Sithaikkindrathu - அழிப்பதானது
ஈங்கு, Eengu - ‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால், Oor Penpaal - ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும், Poruloo Ennum - புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ, Ikazhvo - அவதாரமோ? (அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ, Ivattrin Puraththal Endru Enno - (உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்குஉள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம், Theruloam - அறிகின்றிலோம்
2511திருவிருத்தம் || 34
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
மாலே, Male - எம்பெருமானே
ஆழி, Aazhi - கூடல் வட்டமானது
சிதைக்கின்றது, Sithaikkindrathu - காரியத்தைக் கெடுக்கின்றது
என்று, Endru - என்ற காரணத்தினால்
ஆழியை, Aazhaiya - அக்கூடல் வட்டத்தை
சீறி, Seeri - கோபித்து
தன் சிறுஅடியால், Than Siruadiyal - தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற, Uthaikkindra - உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது, Unathu - உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற, Than Thar Thathaikkindra - வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற, Anivaan Adhuve Manam Aaypathaikkindra - சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து, Maathin Thirathu - இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது, Seyal Paalathu - செய்யததக்கதை
அறியேன், Ariyyeen - யான் அறிகின்றிலேன்.
2512திருவிருத்தம் || 35
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
பால் வாய் பிறை பிள்ளை, Paal Vaai Pirai Pillai - அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகியபால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை
ஒக்கலைகொண்டு, Okkalaikondru - தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண், Pagal Izhanda Mel Paal Thisai Pen - ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும், Pulambu Urum - வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால், Ulaku Alandha Maal Paal - உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு, Thuzhaikku - திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு, Manam Udaiyaarkku - ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம், Nalkirtrai Ellam - அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான், Solvan - கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து, Pugunthu - வந்து
இது ஓர் பணிவாடை, Idhu Oru Panivaadai - இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது, Thuzhaagindrathu - (என்மேல்) தடவுகின்றது; அந்தோ!
2513திருவிருத்தம் || 36
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
துழா நெடு சூழ் இருள் என்று, Thuzha Nedhu Soozh Irul Endru - (கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேடவேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த, Ezha Nedhu Oozhi Ezuntha - (முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும், Ikkaalaththum - இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ, Eengu Ivalo - இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ, Tham Than Thaar Adhu Peyar Aa - நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு)
வழா நெடு துன்பந் தன், Vazha Nedhu Thunban Than - தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று, Endru - என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார், Irangaar - (தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ, Ammanoo - அந்தோ!
இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ள
குழாம், Kuzhaam - கூட்டமான
நெடுமாடம், Nedumaadam - பெரிய மாளிகைகளை
இடித்த, Iditha - (தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார், Piranar - தலைவருடைய
கொடுமைகளே, Kodumaikaale - கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.
2514திருவிருத்தம் || 37
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே
அரு வினையேன், Aru Vinaiyen - அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும், Nedu Kaalamum - வெகு காலம்
கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம், Neel Malai Paatham - நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி, Paravi - வழிபட்டு
பெற்ற, Petra - அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான், Thodungaal Osiyum Idai Inamaan - தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற, Sendra - நடந்துபோன
சூழ்கடம், Sozhkadham - பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர், Kodu Kaal Silaiyar - வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர், Nirai Kaal Uzavar - பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய, Kolaiyil Veyya - கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால், Sudu Kaal - நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர், Ilaignar - இளைவீரர்களது
துடி, Thudi - பறைகள்
படும், Padum - ஒலித்தலாகிற
கவ்வைத்து, Kavvaiththu - ஆரவாரமுடையது.
2515திருவிருத்தம் || 38
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே
கடன் ஆயினகள் கழித்து, Kadan Aayinagal Kazhiththu - காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு, Kadham Aayin Pukku - தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால், Tham Kaal Vanmaiyaal - தமது கால்களின் வலிமையால்
பல நாள், Pala Naal - அனேக காலம்
நீர் நிலை நின்ற, Neer Nilai Nindra - நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல், Thavam Ithu Kol - இத் தவத்தினாலேயோ
நீலங்கள், Neelangal - நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி, Kudam Aadi - (கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும், I Mannum - இந்த மண்ணுவகமும்
விண்ணும், Vinnum - விண்ணுலகமும்
குலுங்க, Kulunga - நெகிழும்படி
உலகு, Ulaku - உலகங்களை
அளந்து, Alandhu - அளவிட்டு
நடம் ஆடிய, Nadam Aadiya - (இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான், Perumaan - எம்பெருமானுடைய
உரு ஒத்தன, Uru Oththana - திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
2516திருவிருத்தம் || 39
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
நீலம், Neelam - நீலமணிமயமான
தடவரை மேல், Thadavarai Mel - பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து, Pundareekam Nedhu Thadangal Pola Polinthu - பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும், Emakku Elladha Idaththavum - எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை (எவையென்னில்)
பொங்கு முந்நீர், Pongu Munnir - கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான், Visumbukkum Piraan - விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான், Mattrum Nalloorpiraan - மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான், Kolam Kariya Piraan - திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமானுடைய
கண்ணின், Kannin - திருக்கண்களினுடைய
கோலங்களே, Kolangalye - அழகுகளேயாம்.
2517திருவிருத்தம் || 40
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ
கோலம், Kolam - அலங்காரத்தையுடைய
பகல், Pagal - ஸூர்யனாகிய
களிறு ஒன்று, Kaliru Ondru - ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய, Kal Puyya - அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த, Kuzham Virindha - திரளாகப் பரந்த
நீலம், Neelam - நீலநிறத்தையுடை
கங்குல், Gangul - இரவாகிய
களிறு எல்லாம், Kaliru Ellam - யானைகளெல்லாம்
நிரைந்தன, Niraindhana - அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர், Ner Izhaiyeer - தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம், Njaalam - பூ தேவிக்கும்
பொன் மாதின், Pon Maathin - ஸ்ரீ தேவிக்கும்
மணாளன், Manaalan - நாயகனான எம்பெருமான்
துழாய், Thuzhai - (தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே, Nangal Soozh Soozharkae - எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து, Aela Punaindhu - தகுதியாகச் சூட்ட
என்னைமார், Ennai Maar - எமது தாய்மார்
எம்மை நோக்குவது, Emmai Nookkavudhu - என்னைப் பார்ப்பது
என்று கொலோ, Endru Koloo - என்றைக்கோ?
2518திருவிருத்தம் || 41
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே
என்றும், Endrum - எப்பொழுதும்
புன், Pun - கொடுமை செய்கிற
வாடை இது, Vaadai Ithu - இந்த வாடையை
கண்டு அறிதும், Kandu Aridum - கண்டறிவோம்!
இ ஆறு வெம்மை உருவம், I Aaru Vemmai Uruvam - இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும், Suvadum - குறிப்பையும்
ஒன்றும், Onrum - ஒருவிதத்தாலும்
தெரியிலம், Theriyilam - அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர், Ongu Asurar - வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்னும் வகை, Ponnum Vagai - அழியும்படி
புள்ளை, Pullai - கருடப்பறவையை
ஊர்வான், Oorvan - ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத, Arul Aruladha - தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள், I Naal - இக்காலத்திலே
வன் காற்று, Van Kaatru - வலியவாடையானது
என்னை, Ennai - என்னை
மன்றில் நிறை பழி, Manril Nirai Pazhi - வெளியிலே பரவிநிறைகிற பழிப்பை
தூற்றி, Thoortri - அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும், Ninru Adum - அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது
2519திருவிருத்தம் || 42
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.
எம் பிரான், Em Piraan - எம்பெருமானுடைய
கட கண்கன், Kada Kankan - பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும், Mannum Vinnum - மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு, En Kaaru - எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின், Alavu Innum Kaanmin - இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து, Enban Othu - என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த, Vaan Nimirtha - மேலுலகை நோக்கி வளர்ந்த
தன், Than - தன்னுடைய
கால், Kaal - திருவடிகளை
பணிந்த, Panintha - வணங்கின
என்பால், Enpal - என்னிடத்து.
வன் காற்று அறைய, Van Kaatru Araya - பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த, Orungae Marinthu Kidandhu Alarntha - ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால், Menkaal - மெல்லிய நாளத்தையுடைய
கமலம் தடம்போல், Kamalum Thadampol - தாமரைத் தடாகம்போல
பொலிந்தன, Polinthana - அழகுமிக்கு விளங்கின.
2520திருவிருத்தம் || 43
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் இவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
கண்ணும், Kannum - திருக்கண்களும்
செந்தாமரை, Senthamarai - செந்தாமரைப் பூவையொப்ப
கையும், Kaiyum - திருக்கைகளும்
அவை, Avai - அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ, Adiyo - திருவடிகளும்
மதி விகற்பால், Madi Vikarpal - ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து, Vinnum Kadandhu - ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு, Umbar Appal Mikku - அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே, Avaiye - அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது, Embiranathu - எம்பெருமானுடைய
எழில் நிறம், Ezhil Niram - அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஒர் மால் வரைபோன்று, Vannam Kariyadhu Or Maal Vairaiponru - நிறத்தில் கறுத்ததான வஒரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் இவர்க்கும், Matra Eppal Ivarkkum - அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ, Ennum Idathuvo - (இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று.)
2521திருவிருத்தம் || 44
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.
நிறம், Niram - திருமேனி நிறமும் (- (இவை இவை என்று இனனின்னவையென்று))
உயர் கோலமும், Uyar Kolaum - சிறந்த அலங்காரமும்
பேரும், Perum - திருநாமமும்
உருவும், Uruvum - வடிவமும்
அங்கு அங்கு எல்லாம், Angu Angu Ellam - கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி, Ura Uyir Nyanam Sudar Vilakku Aay Nindrathu Andri - மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும், Aram Muyal Nyanam Samayigal Pesilum - தருமமார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய  வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை, Embiran Perumaiyai - எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை, Onrum Per Mudhal Nindrar Illai - ஒருவையாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.
2522திருவிருத்தம் || 45
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.
நட, Nada - நெஞ்சமே (- (பேதை நெஞ்சமே!) (அப்படிப்பட்ட நமக்கு))
பெருகேழலார், Perugezhalar - (பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹாவராஹரூயானவனர்
இ அகாலம், I Akalam - (ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம், Tham - தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம், Peru Kan Malar Pundareekam - பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல், Nammael - நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார், Orungae Pirazha Vaiththaar - ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர், Nam Pol Varum Kezhbavar - (அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே, Oruthar Ulaare - வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம், Thollai Vazhiyam - (அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
சூழ் பிறப்பு, Sool Pirappu - விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே, Marungae Vara Perume - அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு, Solla - சொல்லாய்;
வாழி, Vaazhi - (கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.
2523திருவிருத்தம் || 46
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.
மடம் நெஞ்சம் என்றும், Madham Nenjam Endrum - பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும் (- (ஏனெனில்))
தமது என்றும், Thamathu Endrum - நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி, Oru Karumam Karuthi - ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார், Nenjaivida Utrar - மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும், Vidavo Amayum - அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
அ பொன் பெயரோன், A Pon Peyron - அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம், Tada Nenjam - பெரிய மார்பை
கீண்ட, Keenda - எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது, Piranar Thamadu - பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ், Adikizh - திருவடிகளிலே
விட, Vida - (யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட  (அது)
போய், Poi - விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய், Thidam Nenjam Aay - உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து, Emmai Neethu - (தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும், Indru Tharum - இன்றுவரையில்
திரிகின்றது, Thirigindrathu - (அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.
2524திருவிருத்தம் || 47
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே
வடமாருதம், Vadamarudham - வாடைக்காற்று (- (ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே))
திரிகின்றது, Thirigindrathu - உலாவுகிறது;
திங்கள், Thingal - (குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம்  தீ, Vem Thi - கொடியநெருப்பை
முகந்து சொரிகின்றது, Mugandhu Sorikindrathu - வாரியிறைக்கின்றது:
அதுவும் அது, Adhuvum Adhu - முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய
விண் ஊர், Vin Oor - பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே, Thozhave - இடைவிடாது தொழுது அநுபவிக்கவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம், Sangam - (கையிலணிந்துள்ள) சங்குவளை.
சரிகின்றது, Sarigindrathu - கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaykku - (அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
முழு மெய்யும், Muzhu Meyyum - உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?, Vannam Payalai Virigindrathu - (இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம்பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு, En Melliyarku - மென்மையான தன்மையையுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - யாதாய் முடியுமோ.
2525திருவிருத்தம் || 48
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,
மெல இயல், Mela Iyalku - மென்மையான தன்மையையுடைய (- (அறியமாட்டாது; அதுபோல))
ஆக்கை, Aakkai - உடம்பை யுடைத்தான
கிருமி, Kirumi - புழுவானது
குருவில், Kuruvil - புண்ணிலே
மிளிர்ந் தந்து, Milirn Thandhu - வெளிப்பட்டு
அதுவே, Adhuve - அவ்விடத்திலேயே
செல்லிய, Selliya - நடமாடும்படியான
செலதைத்து, Selathaitthu - ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும், Ulagai En Kaanum - உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
என்னாலும், Ennalum - என்னைக்கொண்டும்.
தன்னைச் சொல்லிய, Thannaich Solliya - தன்னைப் பாடுவித்த
சூழல், Sozhai - சூழ்ச்சியையுடைய
திருமாலவன், Thirumalavan - ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி, Kavi - புகழுரையை
யாது கற்றேன், Yadhu Kattren - (யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும், Palliyan Sollum - பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ, Sol A Kolvathoo - (பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு, Pandhu Pandhe Undu - மிக வெகு காலமாகவுள்ளது
2526திருவிருத்தம் || 49
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.
காள வண்ணம், Kaala Vannam - கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய், Vandu Un Thuzhai - வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான், Perumaan - ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன், Madhusoodhanan Thamodharan - மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும், Undum - (பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும், Umizhndhum - (பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய, Kaday - பாதுகாக்கப்பெற்ற
மண், Man - பூமியினுடைய
ஏர், Aer - அழகை
அன்ன, Anna - ஒத்த
ஒள் நுதலே, Ol Nuthale - ஒளிபொருந்திய நெற்றியையுடையவளே!
பண்டும், Pandhum - முன்பும்
பலபல, Palapala - மிகப்பலவான
வீங்கு இருள், Veengu Irul - பெரிய இருட்பொழுதுகளை
காண்டும், Kaandum - பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல், I Bay Irulpol - இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம், Kandum Arivadhum Kaetpadhumyam Ilam - யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.
2527திருவிருத்தம் || 50
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.
வலவ, Valava - பாகனே! (- (எவ்வித்திற்கு? என்றால்))
ஒன்நுதல், Onnudhal - அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி, Mamai Oli - மேனி நல்நிறத்தின் விளக்கம்
பயவாமை, Payavamai - பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர், Nam Ther - நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும், Virainthu Nannudhal Vendum - துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
தேன் நவின்ற, Then Navinra - வண்டுகள் பாடப்பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி, Vin Mudhal Nayagan Neel Mudi - பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய், Vel Muththam Vaasikaithu Aai - வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண்முதல் சேர்வு|ற்ற, Manmudhal Seruvattr - (முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி, Aruvi - நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும், Seyyaa Nirkum - செய்து நிற்கிற
மா மலைக்கு, Maa Malaikku - பெரிய திருமலைக்கு
இன்று கடாக, Indru Kadaaka - இப்பொழுது (தேரை)நடத்துவாயாக
2528திருவிருத்தம் || 51
மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே!
கடல், Kadal - கடலானது
மலை, Malai - மந்தரபர்வதத்தை
மத்து ஆ கொண்டு, Maththu Aa Kondu - மத்தாகக்கொண்டு
அரவால், Aravaal - வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய, Suzhatriya - (தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம், Maayam - அற்புதசக்தி வாய்ந்த
பிரான், Piraan - எம்பெருமான்
அலைகண்டு, Alaikandu - (தன்னை) அலைத்து
கொண்ட, Konda - (தன்னிடத்தினின்று) எடுத்துக்கொண்ட
அமுதம், Amudham - அமிர்தத்தை
கொள்ளாது, Kollaadhu - (மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ, Vaeri Thuzhai Thunai Aa - பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலைகொண்டு, Thulaikondhu - ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து, Thaayam Kilarndhu - பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து, Barathar Vilai Kondo Thandha Sangam Ivai Kolvaan Othu - நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று) விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,, Alaikkindrathu - (சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.
2529திருவிருத்தம் || 52
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.
அழைக்கும், Alaikkum - (அன்போடு) அழைக்கிற
கருகடல், Karugadal - (தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வௌ திரை கை, Vau Thirai Kai - (தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய், Kondo Poi - எடுத்துக்கொண்டுபோக,
விண்வாய், Vinvaai - ஆகாயத்திலே
புலம்பி அழைத்து, Pulambi Azhaitthu - (மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும், Mulai Malai Mael Nindrum - (தனது) ஸ்தனங்களாகிய மலைகளின்மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை, Alar Vaai Mazhai Kan Madanthai - தாமரமைலரில் வாழ்பவளும் மழைபோலக் குளிர்ந்த கண்களையுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற, Aravu Anai Aera - (அப்பாற் கடலினிடையிற் பள்ளிகொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,  (அது கண்டு)
மண் நாதர், Man Naadhar - பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய், Aarugal Aayi - ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர், Mazhai Kanna Neer - மழையாகிய கண்ணீரான்றி
திருமால் கொடையான் என்று, Thirumaal Kodaiyaan Endru - திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது, Vaarkindrathu - பெருகுகிறது.
2530திருவிருத்தம் || 53
வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே.
வாரா ஆயின முலையான, Vaaraa Aayin Mulaiyaan - கச்சுப்பொருந்திய தனத்தையுடையவளான (- (இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;) (கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்))
இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய
இது, Idhu - இந்த நோயானது
வானோர் கலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய், Vaanor Kalaimagan Aam Seer Aayin Deivam Nalnoy - தேவாதி தேவனான திருமாலினது தகுதியான திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
தெய்வம், Deivam - திய்வமான
தண், Than - குளிர்ந்த
அம், Am - அழகிய
துழாய் தார் ஆயினும், Thuzhai Thaar Aayinum - (அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும், Thazhai Aayinum - (அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும், Than Kombu Adhu Aayinum - குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும், Keelveer Aayinum - கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும், Nindra Man Aayinum - (அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
2531திருவிருத்தம் || 54
வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!
நெய், Ney - (திருவாய்ப்பாடியிலே) நெய்யை (- (எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது) பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும்.))
தொடு உண்டு, Thodu Undu - கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி, Aesumpadi - (பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும், Anna Seyyum - (மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச்  செய்தருளிய
எம் ஈசர், Em Eesar - எமது தலைவரும்
விண்ணோர் பிரானார், Vinnor Piranaar - (மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ், Maasu Il Malar Adi Keel - குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும், Emmai Seruvikkum - எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே, Vandugalai - ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்திரி, Veeseum Siragal Parathiri - வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது, Vin Naadum Thungattu Elidhu - (அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
2532திருவிருத்தம் || 55
வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே?
வண்டுகளோ, Vandugaloo - வண்டுகளே!
வம்மின், Vammin - வாருங்கள்;
நீர் பூ, Neer Poo - நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ, Nilam Poo - நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ, Marathin Onpoo - மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு, Undu - (தேனைக்) குடித்து
களித்து, Kalithu - களிப்படைந்து
உழல்வீர்க்கு, Uzhalveerkkum - (எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம், Onru Uraikiyam - (யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய், Eyanam Onru Aay - ஒப்பற்ற வொரு வராஹமூர்த்தியாய்
நண் துகள் ஆடி, Nand Thugal Aadi - பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம், Vaikundham - பரமபதத்தை
அன்னாள், Annala - ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய், Kuzhalvaai - கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல், Virai Pool - பரிமளம்போல
விண்டு, Vindhu - மலர்ந்து மணம் வீசி
கள் வாரும், Kal Vaarum - தேன் பெருகப்பெற்ற
மலர், Malar - பூக்கள்
தும் வியல் இடத்து, Dhum Viyal Idathu - உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ, Ulavo - இருக்கின்றனவோ?
2533திருவிருத்தம் || 56
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.
வியல், Viyal - விசாலமான
இடம், Idam - உலகங்களை
உண்ட, Unda - திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார், Piranar - பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த, Vidutha - (எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால், Thiru Arulal - சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று, Uyil Idempetru - உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தம், Uyandham - வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம், Anjalam - (இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி, Thozhi - வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து, Or Than Thendral Vandu - ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர், Ayilidai Yaarum Arindhilar - அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன், Am Poo Thuzhayin In Then - அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனியதேன்துளிகளை
புயலுடை நீர்மையினால், Puyaludai Neermaiyinal - மழைதுளித்தல் போலத் துளிக்குந்தன்மை யுடையதாய்
என், En - என்னுடைய
புலன், Pulan - அவயவங்களிலும்
கலன், Kalan - ஆபரணங்களிலும்
தடவிற்று, Thadavitru - ஸ்பர்சித்தது
2534திருவிருத்தம் || 57
புலக்குண்டலப்  புண்டரீகத்த போர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார் * எம்மை யாருங்கழறலரே
புலம் குண்டலம், Pulam Kundalam - அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த, Pundareekath - தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை, Porkendai - (தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டைமீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு, Valli Ondraal Vilakkundu - (மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று, Ulakingru - (தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக்கொண்டு
வேல் வழிக்கின்றன, Vel Vazhikkinrana - வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன், Kannan - எம்பெருமானுடைய
கையால், Kaiyal - திருக்கைகளால்
மலக்குண்டு, Malakkundu - கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த, Amudham Surandha - (தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல்போன்று, Mari Kadalponru - அலைகிளரப்பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று, Avatraal Kalakkundu Naanru - அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார், Kandaar - (அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும், Yaarum - எவரும்
எம்மை, Emmai - எம்மை
கழறலர், Kazhalalar - (ஒருத்தியின் கண்பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.
2535திருவிருத்தம் || 58
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?
ஒன்றே, Ondrae - ஒரு திருவடியிடமே
ஆயிற்று, Aayitru - பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது; மற்றொரு திருவடி
முழுதாயிற்று, Muzhudhaayitru - (பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர், Uzhalru Alar - உலகுங்செல்லவல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய், Gnanaththu Sudar Aay Vilakkai - ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரை இல்ல, Uyarnthorai Illa - (தன்னிலும்) மேற்பட்டவரையுடையவனல்லாதவனும்
நிழல் தர, Nizhal Thara - நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும், Ella Visumbum - ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது, Niraindhathu - வியாபித்தது
நீண்ட அண்டத்து, Neenda Andhathu - அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன், Azharu Avar Thamarai Kannan - சேற்றில் மலர்ந்த செவ்விமாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ, Ingu Alakkindrathu Enno - இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?
2536திருவிருத்தம் || 59
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.
வல்வினையேன், Valvinaiyen - கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை, Thala Peru Neel Muruvai Seyyavaya Thadamulai - முல்லையரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல்வரிசையை யுடைய சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களையுடையவளாகிய இப்பெண்பிள்ளை (என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய, Alappu Aru Thanmaiya - “அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி, Oozhi - கற்பங்களினும்
அம், Am - அழகிய (நீண்ட)
கங்குல், Gangul - இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன், Am Thannam Thuzhaykku Ulam Peru Kaadhalin Neeliy Aay Un - அழகிய குளிர்ந்த  திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன், Ongu Munneer Valam Peru Naadan - உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன், Madhusoodhanan - மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும், Ennum - என்று வாய்விட்டுச் சொல்லியலற்றுகிறாள்.
2537திருவிருத்தம் || 60
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
முலையோ, Mulaiyo - ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில், Muzhu Mutrum Ponthil - மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல், Moy Poo Kuzhal - அடர்ந்த மென்மையான தலைமயிர்கள்
குறிய, Kuriya - (முடிகூடாமல்) குட்டையுள்ளன;
கலையோ, Kalaiyo - அடையோ வென்னில்
அரை இல்லை, Arai Illai - இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ, Naavo - நாக்கோவென்னில்
குழறும், Kuzharum - (திருத்தமாக வார்த்தை சொல்லமாட்டாமல்) குதலைச்சொல்  பேசுகின்றது.
கண், Kan - கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என, Kadal Mann Ellam Vilaiyo Ena - கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப்பொருளோவென்று சொல்லும்படி
மிளிரும், Milirum - (ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான்மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்., Perumanmalaiyo Thiruvaengadam Endru Karkindra Vaasagam - ‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள்  பரமே, Ival Parame - (இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.
2538திருவிருத்தம் || 61
வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
தொல்லை வானவர் தம் நாயகன், Thollai Vaanavar Tham Naayagan - பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன், Naayakar Ellam Thozhumavan - ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும், Njaalam Mutrum - உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை, Veiy Aham Aayinum Soora Vagai - ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன், Irande Adiyal Thaayavan - (தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம் இதை, Nam Idai - நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று, Aay Kulam Aay Vandhu Thonrirru - இடையர் குலத்தையுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்துவளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது, Vaasagam Seivathu - எடுத்துப்புகழ்ந்து கூறுவது
நம்பரமே, Nambaramai - நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)
2539திருவிருத்தம் || 62
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.
இரக்கினும், Irakkinum - எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் (- (காப்பு அரிது))
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது, Oru Penpaal Enavum Eengu Irai Irangadhu - இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கரு கடல், Karud Kadal - கரியகடலானது
அறையோ என நின்று அதிரும், Araiyoo Ena Nindru Adhirum - (இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ, O - இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல், Aravu Anaimel - சேஷசயனத்தின் மீது
பள்ளிகொண்ட, Pallikonda - சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே, Mugil Vannane - காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு, Eengu - இவ்விடத்தில்
இவள்தன், Ivalthan - இவருளுடைய
நிறையோ, Niraiyo - நினைக்குணமோவென்னில்,
இனி, Ini - இனிமேல்
உன் திருஅருளால், Un Thiruarulaal - உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி, Andri - பாதுகாத்து வைக்க முடியாது;
முறையோ, Murayo - (இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?
2540திருவிருத்தம் || 63
வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே.
வண்ணம் சிவந்துள, Vannam Sivanthula - திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய, Vaan Naadu Amarum Kulir Vazhiy - பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையையுடைவையும்
தண் மெல் கமலம் தடம்போல் பொலிந்தன, Than Mel Kamalam Thadampol Polinthana - குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம்போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம், Ivaiyo Tham - இத்திருக்கண்களோ
கண்ணன், Kannan - கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால், Thirumaal - திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும், Thirumugam Thannodum - திருமுகமண்டலத்திலே
காதல் செய்தேற்கு, Kaadhal Seitherkku - வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம், Ennam - மனத்திலே
புகுந்து, Pugunthu - பிரவேசித்து
இ காலம், I Kaalam - இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற, Adiyenodu Irukkindra - (விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.
2541திருவிருத்தம் || 64
இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.
நிலம் தேவா, Nilam Devaa - பூமிதேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால், Irukku Aar Mozhiyal - வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை, Neri Izhakkamaai - முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர், Ulaku Alandha Thiruthal Thunai Vananghuvar - உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும், Yaamum - நாமும்
அவா ஒருக்கா, Ava Orukka - (எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து, Vinaiyodum Emmodum Nondhu - (அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக்கொண்டு
கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள்போல, Kani Inmaiyin Karukkai Nadippavargalpol - பழம்  கிடைக்காமையாற் பிஞ்சைத்தின்பவர் போல
திருநாமம் சொ£ல் கற்றனம், Thirunamam Sol Kattranam - (பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.
2542திருவிருத்தம் || 65
கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.
கன்று பிணை, Kandru Pinai - இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின், Malar Kannin - பரந்த கண்களின்
குலம், Kulam - சாதியை
வென்று, Vendru - ஜயித்து
ஒரே கருமம் உற்று, Ore Karumam Utru - ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று, Payinru - அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி, Seviyodu Usavi - (அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த, Utrum Uraadhum Milirndha - (எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய், Kan Aay - கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ், Ulagam Ellam Mutrum Vizhungi Umizhndha Piraanar Thiru Adi Keel - எல்லாவுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற, Emmai Unarghindra - எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.
2543திருவிருத்தம் || 66
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.
எரி, Eri - அக்நியும் (- (எம்பெமான் தனது எம்பெருமானுடைய))
நீர், Neer - ஜலமும்
வளி, Vali - வாயுவும்
வான், Vaan - ஆகாசமும்
மண், Man - பூமியும்
ஆகிய, Aagiya - என்னும் பஞ்சபூதங்களின் வடிவமான
காலிகள், Kaaligal - செங்கழுநீர்ப்பூக்காளனவை
உண்ணாது, Unnaathu - உண்ணாமலும்
உறங்காது, Urangaatu - தூங்காமலும்
உணர்வு உறும், Unarvu Urum - (எப்பொழுதும் த்யாகரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான், Vaikundham Annan - ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய், Kan Aay - கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின, Aru Vinaiyen Uyir Aayin - தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர்நிலையான
எத்தனை யோகியர்க்கும், Ethanai Yogiyarkkum - மிக்க யோகநிலையையுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய், En Aayi - (அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத்தக்கவையாய்
மிளிரும், Milirum - பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம், Iyalthin Aam - தன்மையையுடையவையாம்.
2544திருவிருத்தம் || 67
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.
அசுரை, Asurai - அசுரர்களை
செற்ற, Settra - அழித்த
மா விய புள் வல்ல, Maa Viya Pul Valla - பெரிய ஆச்சர்யகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற
மாதவன், Maadhavan - திருமகன் கணவனும்
துணை மலர், Thunai Malar - ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும், Kaaviyum - செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும், Neelamum - கருநெய்தற் பூவைய|ம்
வேலும், Velum - வேற்படையையும்
பலபல, Palapala - (மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன், Govindan - பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம், Vengadam - திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னான், Thuvi Ambeidai Annan - சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய், Kankal Aayi - கண்களாகிய
வென்று, Vendru - தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு, Paarippu - என்னை வருத்துவதற்கு அடிகோலிய பரப்பு
ஆவியின் அல்ல, Aaviyin Alla - (எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல, Alavu Alla - ஏற்ற அளவல்ல.
2545திருவிருத்தம் || 68
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்
கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.
பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலைமோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம், Nilam - பூலோகத்தை
தாவிய, Thaaviya - அளந்தருளின
எம்பெருமான் தனது, Emperumaan Thanathu - எம்பெருமானுடைய
வைகுந்தம், Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய், Annai - ஒத்துவிளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர்கொண்டு, Kalandhaar Varavu Edhirkondu - (உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள், Val Konraigal - வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனை, Kaarthanai - கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும், Maalaiyum - மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும், Maalai Pon Vaasikayum - பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழைபந்தர், Pulam Thoi Thazhaipandhar - மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே
தண்டு, Thandu - கொம்புகளிலே
உற, Ura - நெருங்க
நாற்றி, Naatri - தொங்கவிட்டுக்கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில, Malarndhe Ozhindhila - முற்றும் மலர்ந்து விட்டனவில்லை
2546திருவிருத்தம் || 69
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே
கார், Kaar - கருத்த
இருள், Irul - இருளாகிய
ஏறு, Eru - எருதானது
செகில், Sekil - சிவந்த
சுடர், Sudar - ஸூர்யனாகிய
ஏற்றிற்கு, Etrikku - எருதுக்கு எதிரில்
உளைந்து, Ulaindhu - இளைத்து
வெல்வான், Velvan - (மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று, Por Etru - போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது, Edhirthathu - வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று, Neer Etru - (மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி  எல்லாம், Puvani Ellam - எல்லாவுலகங்களையும்
அளந்த, Alandha - அளந்து கொண்ட
நெடிய, Nedhiya - நீண்டவடிவமுடைய
பிரான், Piraan - தலைவன்
புன்தலை மாலை, Pundhalai Maalai - அற்புதமான தன்மையையுடைய மாலைப்பொழுதிலே
அருளாவிடுமே, Arulavidume - (உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம், Vaar Etrum Ina Mulaiyam - கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்தஇளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம், Un Valai Thiram - உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன், Varunthen - வருத்தப்படாதே.
2547திருவிருத்தம் || 70
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை
விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.
வளை  வாய் திரு சக்கரத்து, Valai Vaai Thiru Chakkarathu - வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார், Engal Vaanavanar - எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல், Mudimeel - திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய், Thalaivai - கட்டுவாய்ந்த
நறு, Naru - பரிமளமுள்ள
கண்ணி, Kanni - மாலைவடிவமான
தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய
துழாய்க்கு, Thuzhaikku - திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான், Unnam Payalai Vilaivaan - (எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து, Miga Vandu - அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க, Naan Thingal Aandu Vazhi Nirka - நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து, Emmai Ulaivaan Pugundhu - எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல், Idhu Oru Gangul - இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே, Aayiram Oozhigalai - ஆயிரம் கற்பமாகா நின்றது.
2548திருவிருத்தம் || 71
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே.
ஊழிகள் ஆய், Oozhigal Aay - காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான், Ulaku Ezhum Undaan - உலகமுழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம், Endrilam - என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) குறினோமில்லை.
களா பழம் கண்டு, Kala Pazham Kandu - களாப்பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு, Pazham Vannam Aazhi Endraerku - ‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று (குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு, Ahdhe Kondu - அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை, Annai - (எனது) தாய்
இவளோ நாழ் என்னும், Ivaloo Naazh Ennum - ‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும், Gyaanam Undaan Vannam Sol Vitrru Ennum - உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ, Thozhigaloo - தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற, Emmai Ammnai Soozhkindra - எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர், Uraiyeer - நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்
2549திருவிருத்தம் || 72
சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே.
சூழ்கின்ற, Soozhkindra - (இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல், Gangul - ராத்ரியினுடைய
சுருங்கா இருளின், Surunga Irulin - சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை, Karuthinimbai - கறுத்த செறிவை
போழ்கின்ற, Pozhkingira - விளக்கிற
அம்பிள்ளை திங்களும், Ampillai Thingkalum - அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க, Pozhga - (என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து, Thuzhai Malarkke Thazhkingira Nenchatthu - (நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன், Oru Thamiyadadi Yen - ஒரு துணையும்மில்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு, Mamaikku - (இயல்பான) மேனிநிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு, Indru Vazhkingira Aaru - (இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று, Valiyathu Vandu Thonrirtru - சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ, Iduvo - இப்படியோ?
2550திருவிருத்தம் || 73
வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.
விண், Vin - ஆகாயத்தில் நின்று (- (வென் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய))
வால் வெள் நிலவு, Vaal Vel Nilavu - மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால், Paal - பாலை
உலகு ஆர சுரக்கும், Ulaku Aara Surakkum - உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
சுரவி, Suravi - பசுவினது
சுர, Sura - சுரம்பு
முதிர், Mudir - மிகப்பெற்ற
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது, Thamiyatti Thalarnthathu - (நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்ததன்மை
பரிதிவட்டம் போலும், Paridivattam Polum - இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி, Adal Azhi - வலிய சக்கராயுதமுடைய
பிரான், Piraan - அத்தலைவன்
ஏழ்பொழில், Ezhalpozhil - ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம், Alikkum Salpin Thamaikai Kol Aam - ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?
2551திருவிருத்தம் || 74
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே.
தளர்ந்தும்  முறிந்தும் வருதிரை, Thalarndhum Murindhum Varuthirai - (கொந்தளித்து  விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல், Payal - (ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும், Thirunedu Kan Valarnthum - அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும், Arivutrum - (அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும், Vaiyam Vizhungiyum - பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான், Malvaraiyai Kilarndhu Marithara Theendu Eduththan - கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய், Mudichoodu Thuzhai - திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன், Alaindhu Un - அளாவியுண்ட
பசு சிறு தென்றல், Pasu Siru Thendral - புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது, Andho Vandhu Ulaakindrathu - மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.
2552திருவிருத்தம் || 75
உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர்,குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ,வையமோ? நும்நிலையிடமே.
உலாகின்ற, Ulaakindra - (காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை, Kendai - கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு, Oli Ambu - ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ, Em Aaviyai Oodu Uruva - எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற, Kulavugindra - (அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற
வெம்சிலை, Vemsilai - (புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர், Vaal Mugaththir - ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி, Kuni Sangu Idari - வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற, Pulakindra - மீன்  நாற்றம் வீசப்பெற்ற
வேலை, Velaik - அலைகிளர்ச்சியையுடைய
புணரி, Punari - கடலை
அம்பள்ளி, Amballi - அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான், Amman - ஸர்வேச்வரனது
அடியார் நிலா கின்ற, Adiyaar Nila Kindra - பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ, Vaikundhamo - ஸ்ரீவைகுண்ட லோகோம
வையோம, Vaiyoma - இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம், Num Nilai Idam - உங்களது இருப்பிடம்?
2553திருவிருத்தம் || 76
இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.
இடம்போய் விரிந்து, Idampoi Virinthu - எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான், I Ulagu Alandhaan - இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர், Ezhil Aar - அழகு நிறைந்த
தண், Than - குளிர்ந்த
துழாய்போது வடம், Thuzhaipothu Vadham - திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும், Inaiyum - வருந்துகிற
மட நெஞ்சமே, Mada Nenjamai - பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது, Viyal Thaamaraik Kadhapothu - சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க, Odunga - குவிய
மேல் ஆம்பல், Mel Aambal - புல்லிய ஆம்பலை
அலர்விக்கும், Alarvikkum - அலரச் செய்கிற
வெள் திங்கள், Vel Thingal - வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது, Nangal Velvanaykke Vadham Pol Virithal Ithu - நமது வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே, Viyappe - ஓர் ஆச்சரியமோ?
2554திருவிருத்தம் || 77
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.
திங்கள், Thingal - பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை, Ambillai - அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப, Pulamba - (தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட, Chengol Than Arasupatta - சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம், Chem Kalam - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி, Patri - அடைந்து
நின்று, Ninru - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு, Enku - வருந்துகிற
புல்மாலை, Pulmalai - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை, Thenpal Ilangai - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த, Vem Kalamseitha - கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார், Nam Vinnor Piranar - நமது வோதி தேவனான தலைவனது
துழாய், Thuzhai - திருத்துழாயை
துணை ஆ, Thunai Aa - தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்ககளை மாமை கொள்வான், Nangagalai Mamaik Kolvvan - நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது, Vandhu Thondri Nalikinrathu - எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது
2555திருவிருத்தம் || 78
நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த
வலியும் பெரு மையும் யாஞ்¦ சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.
நலியும்நரகனை வீட்டிற்றும், Naliyumnarakkanai Veetirum - (உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும் (- (எமது நாயகனார்))
வாணன் திண்தோள் துணிந்த வலியும், Vaanan Thinthol Thunindha Valiyum - பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும், Perumaiyum - (அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல, Yaam Sollum Neerthu Alla - (எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார், Mai Varaipol Poliyum Uruvin Piraanaar - அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே, Punar Poodhuzhai Malarkke - சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும், Meliyum - ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார், Mada Nenjinaar - (எமது) பேதைநெஞ்சு
தந்து போயின, Thandu Poyina - (தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை, Vedhanai - இத் துன்பங்கள்.
2556திருவிருத்தம் || 79
வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.
வேதனை, Vedhanai - வேதம் வல்லவனும்
வெள் புரி நூதனை, Vel Puri Noodhanai - சுத்தமான யஜ்னோபவித முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை, Vinnor Parava Nindra Saadhanai - மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை, Gnaanalam Vizhungum Anaadhanai - (பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை, Gnaalam Thathum Paadhanai - உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல், Paal Kadal Paambu Anaimeel - திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும், Palli Konda Arulum - யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே, Seethanaiye - குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார், Thozhuvaar - இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர், Vin Ulaarilum Seeriyar - பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.
2557திருவிருத்தம் || 80
சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த
பேரர சேஎம் விசும்பர சேஎம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சேஅரு ளாய்,இரு ளாய்வந் துறு கின்றதே.
சீர் அரசு ஆண்டு, Seer Arasu Aandu - சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ, Than Chengol Sila Naan Seleei I - தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த, Kazhintha - பின்பு இறந்தொழிந்த
பார் அரசு, Paar Arasu - ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து, Ottu - போன்று
ஞாயிறு, Nyaayiru - ஸூர்யன்
மறைந்து, Maraindhu - அஸ்தமித்தான்;
பார் அளந்த, Paar Alandha - உளகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே, Peer Arase - சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே, Em Visumbu Arase - பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த, Emmai Neethu Vanchiththa - எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே, Oor Arase - ஒப்பற்ற நாதனே!
அருளாய், Arulai - (இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது, Irul Aay Vandhu Koorrugindrathu - இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.
2558திருவிருத்தம் || 81
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே!
ஓர்ப்பு இலர் ஆண், Oorppu Ilar Aan - (இவளுக்கு நேர்ந்துள்ள கோயில் தன்மையையும் அதன் காரணத்தையும் அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற, Koorrugindr - (இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள், Kanmakal - (வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன, Melan - மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர், Ivazhai Perugindra Thaayar - இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல், Mei Nonthu Peraar Kol - உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ?
குழல்வாய், Kuzhalvaai - (இவளது) கூந்தலிலே
துழாய், Thuzhai - (எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர், Koorrugindrilar - சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம், Thollai Vengadam - பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும், Aattavum - இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர், Sozhgindrilar - ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம், Ival Aagam - இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள, Mel Aavi Eri Kollu - மென்மையான உயிரை விரஹித்தீக் கவர்ந்துகொள்ளும்படி
இறுகின்றது, Irugindrathu - முடிகறிவளவாகா நின்றது.
2559திருவிருத்தம் || 82
எரிகொள்  செந்நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள் செந்தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே?
எரிகொள், Erikol - வெப்பத்தைக் கொண்ட (- (எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்))
செம் ஞாயிறு இரண்டு, Sem Nyayiru Irandu - சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே, Udaney - ஒருங்கே
உதயமலையாய், Udayamalaiyai - உதய பர்வதத்திலே
விரிகின்ற, Virikindra - தோன்றிவிளங்குகிற
வண்ணத்த, Vannathth - தன்மைபோன்ற தன்மையையுடைய
எம்பெருமானது கண்கள், Emperumanathu Kangkal - எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள், Avattrul - அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள், Erikol - ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற
செம் தீ, Sem Thee - சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ், Meendu Veel - (வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறந்க்கிற
அசுரரைபோல, Asurarai Pola - (பகைவரான கொடிய மாந்தேஹரென்னுடுமம்)) அஸுரர்களுக்குப் போல
விரிவ, Viriva - தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
வையம் முற்றும் விளரியது, Vaiyam Mutrum Vilariyadhu - (எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ, Iduvo - இதுதானோ?
சொல்லீர், Sollir - சொல்லுங்கள்.
2560திருவிருத்தம் || 83
விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும்
தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே.
விளரி, Vilarai - விளரியென்னும் இசையையுடைய (- (இவ்வாற்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு))
குரல், Kural - குரலையுடைய
அன்றில், Anril - அன்றிற்பறவை
மெல் பெடை, Mel Pedai - மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை, Moondril Pennai Mulari Kurambai - முன்வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் அவியும், Mel Aviyum - (இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும், Naiyum - (உடம்பின் ) இளைப்பும்
எல்லாம், Ellam - என்னும் இவையாவும்
இது இது ஆக, Idhu Idhu Aaga - இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும், Mugilvannan Peer Kilari Kilari Pithatrum - காயமேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை (வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ, Thalarin Koloo - முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு, I Thayalukku - இம்மகளுக்கு
உய்யல் ஆவது, Uyyaal Aavathu - (அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன், Ariyyeen - அறிகிறேனில்லை.
2561திருவிருத்தம் || 84
தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்
மையவண்ணா! மணியே,முத்தமே! என்றன் மாணிக்கமே!
மைய வண்ணா, Maiya Vannaa - மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே, Maniye Muththame Endradhan Manikkame - நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள், Thayal Nallargal - அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும், Kuzhangal Kuzhiya Kuzhuvinullum - கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள், Aiyya Nallargal - சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும், Kuzhiya Vizhavinum - திரண்ட திருவிழாக்களிலாயினும்
அங்கு அங்கு எல்லாம், Angu Angu Ellam - இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும், Kaiya Pon Aazhi Ven Sangodum - கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன், Naan Kaanbaan Alavuvan - நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.
2562திருவிருத்தம் || 85
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!
உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை அளந்து கொண்ட (- (மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று))
மாணிக்கமே, Manikkame - மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே, En Maragathame - மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா, Mattru Oppaarai Illaa - தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிபொன்னே, Aaniponne - மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு, Maanikkam Kondo Kurangu - எறிவு ஒத்த
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும், Thunipon Anna Sudar Irulodu Muttapadum - மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலாமே, Adiyen Adi Aavi Adakkalaame - இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர் உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.
2563திருவிருத்தம் || 86
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே – அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து.
காம வேள் தாதை, Kaama Vel Thaathai - மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும், Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து, Vendu - தேவாதிதேவன்
என் உள்ளத்து, En Ullaththu - எனது நெஞ்சிலே
கலந்தான், Kalandhaan - சேர்ந்து கொண்டான்
நான்முகனும், Naanmughanum - பிரமனென்ன
என்ற இவர்கள், Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்தமாட்டாத, Vittu Aethamaattaadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர், Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)
2564திருவிருத்தம் || 87
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?
திருமால், Thirumaal - பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும், Pulambum - (விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல், Kana Kural - கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும், Pozh Vaai Andrilum - பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும், Poo Kazhi Paayndhu Alambum - அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல், Kana Kural - கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும், Sool Thirai Azhiyum - சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை, Aangu Avai - அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக, Nin Valambulladhu Nalam Paadum Ithu Kuttram Aaga - உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை (இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி, Vaiyam Silambumpadi - உலகத்தார் முறையிடும்படி
இ திருவினை, I Thiruvinai - திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே, Seivadhe - துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)
2565திருவிருத்தம் || 88
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே?
மேரு, Meru - மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும், Thirumal Uru Okkum - திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன், A Meruvil Sem Sadaron - அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும், Thirumal Thiru Kai Thiru Chakkaram Okkum - அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும், Anna Kandu - (அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே, Thirumal Uruvodu Avan Chinname - அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும் (நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால், Or Thirumal - ஒப்பற்ற செல்வமாக வேட்கை
தலைக் கொண்ட நங்கட்கு, Thalaik Konda Nankadkku - ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை, Thi Vinai - (பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும், Enge Varum - எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)
2566திருவிருத்தம் || 89
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?
தீ வினைக்கு அரு நஞ்சை, Thi Vinaikku Aru Nanjai - (அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை, Nal Vinaikku In Amudaththinai - (அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்
பூவின் மேவிய தேவி மணாளனே, Poovin Meviya Devi Manalane - தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை, Punmai En Kadhu Aavinai Meyakkumval Aayanai - சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்திலே
உலகு, Ulaku - உலகங்களை
இர் அடியால், Ir Adiyal - இரண்டு அடியாலே
தாவின ஏற்றை, Thavina Etrai - அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை, Emmanai - எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன், Ennanru Talaippeyvan - எப்பொழுதும் சேர்வேன்?
2567திருவிருத்தம் || 90
தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,
நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.
அசுரர் குழாம், Asurar Kuzam - அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த, Tolaipeyta - அழிவைப் பண்ணின
நேமி, Nemi - சக்கராயுதத்தை யுடைய
எந்தாய், Entay - எம்பெருமானே!
யான், Yan - நான்
தலைப்பெய்து, Talaippeytu - (யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த, Nilaippu Eyta - நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு, Akkaikku - இவ்வுடம்பைப்பெறுதற்கு
நோற்ற, Norra - தவஞ்செய்த
இ மாயமும், I Mayamum - இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி, Un Tiru Ati - உனது திருவடித் தாமரை மலர்களை
குடும், Kutum - (எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால், Takaimaiyinal - அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும், Mayam Cevve Nilaippu Eytilata Nilaimaiyum - இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலைநின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு, Kantoru - நோக்குபோதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது, Tollai Uli Surunkalatu - பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)
2568திருவிருத்தம் || 91
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
சுருக்கு உறி வெண்ணெய், Surukku Uri Venney - சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட, Totu Unda - வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை, Kalvanai - கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும், Vaiyam Murrum - உலக முழுவதையும்
இரு குறள் ஆகி, Iru Kural Aagi - மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய, Isaiya - (அவன்தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி, Or Moo Adi Vendi - ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட, Orungu Uru Unda - ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெருவபிற்றாளனை, Peruvapirtraalanai - பெரிய திருவயிற்றையுடையவனும்
மாவலி மாட்டு, Maavali Maatu - மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற, Sendra - எழுந்தருளின
பெரு சிறியானை அல்லால், Peru Siriyanaai Allaal - மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது, Adiyen Nenjam Peanadhu - (அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.
2569திருவிருத்தம் || 92
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்களுடைய (- (பேண்  நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத))
முந்நீர பெரு பதி வாய், Munnira Peru Pathi Vaai - கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர், Neel Nagar - பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய், Neel Eri Vaiththarulai - பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும்
என்று, Endru - என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை, Ninnai - உன்னை
விண்ணோர், Vinnor - தேவர்கள்
வைகல், Vaikal - நாள்தோறும்
மாலையும் காலையும், Maalaiyum Kaalaiyum - இரண்டு சக்திகளிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர், Thaan Nilam Thoayndhu Thozhuvar - தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்; (அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி)
நின் மூர்த்தி, Nin Moorthi - உனது வடிவத்தின்
பல் கூற்றில், Pal Kootril - பல  அம்சங்களுள்
ஒன்று, Onru - ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே, Kaanalum Aam Kol Endrae - பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
2570திருவிருத்தம் || 93
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.
காலை, Kaalae - உதய காலத்தில்
வெய்யோற்கு முன், Veyyoorku Mun - ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த, Ottuk Koduththa - நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர், Gangula Kurumbar - இருளாகிய சிற்றரசர்கள்
மாலை, Maalai - ஸாயங்காலத்திலே
வெய்யோன், Veyyon - அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட, Pada - அழிய
வையகம் பாவுவர், Vaiyagam Paavuvaar - (தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும், Anna Kandu - அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை, Kaalae - காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி, Nal Gyaanam Thurai Padinthu Aadi - நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் அழ்ந்து ஈடுபட்டு)
கண்போது செய்து, Kanbodu Seidhu - பக்தி பாரவசயத்தாலே கண்களை  மூடிக்கொண்டு
மாலை, Maalai - எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார், Nal Naavil Kollaar - (தங்களுடைய) நல்ல நாவினால் பெயர்கூறித் துதியார்;
அவன் மைபடி, Avan Maipadi - அவனது கரிய திருமேனியை
நினையார், Ninaiyaar - நினைப்பதற்கு செய்யார்.
2571திருவிருத்தம் || 94
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
மை படி மேனியும், Mai Padi Meeniyum - நீலநிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும், Sem Thaamarai Kannum - செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையு முடைய
உன், Un - உனது
திரு அடி, Thiru Adi - திருவடித்தாமரை மலர்களை
வைத்திகரே, Vaiththikare - வைதிகர்கள்தாமே
மேய் படியால், Mei Padiyaal - உண்மையான நெறியால்
சூடும், Soodum - தம் தலைமேற்கொண் வணங்கும்படியான
தகைமையினார், Thagaimainaar - தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி, Eppadi Oor A Milakka Kurudu A Milaiyum Ennum Appadi - எப்படி  (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த (கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் கருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன், Yaanum Sonnen - யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன், Adiyen Mattu Yaathu Enban - அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?
2572திருவிருத்தம் || 95
யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால்
யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.
உயிர், Uyir - உயிரானது (- (அங்கு அவ்வுடம்பில்))
முன்னமே, Munname - நெடுநாளாகவே
மூது ஆவியில், Moothu Aaviil - பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்
யாது ஆனும் ஓர் ஆக்கையில், Yaathu Aanum Oor Aakkaiyil - யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு, Pukku - பிரவேசித்து
ஆம்புண்டும், Aampundum - கட்டுப்பட்டு நின்றும்
ஆப்பு அவிந்தும், Aappu Avindum - (அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும்
தடுமாறும், Thadumaarum - நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால், Adhanaal - ஆதலால்
யாது ஆனும் பற்றி, Yaathu Aanum Patri - எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும், Neengum Virathathai Nal Veedu Seyyum - (எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான
மாதாவினை, Maadhavinai - தாய் போன்றவனும்
பிதுவை, Pithuvai - தந்தை போன்றவனுமான
திருமாலை, Thirumaalai - ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன், Vananguvein - கரணமடைந்திருப்பேன்.
2573திருவிருத்தம் || 96
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
வணங்கும், Vanangum - (தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல, Thuraigal Palpala - வகைகள் பற்பலவற்றை
ஆக்கி, Aakki - உண்டாக்கி
மதி விகற்பால், Madi Vikarpal - அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும், Pinangum - (ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல, Samaiy Palapala - மதங்கள் பலவற்றையும்
ஆக்கி, Aakki - உண்டாக்கி
அவை அவை தோறு, Avai Avai Thor - அந்தந்த மதங்கள் தோறும்
அணகங்கும் பலபல, Anakangum Palapala - தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி, Aakki - உண்டாக்கி
நின்மூர்த்தி, Ninmoorthy - (இங்ஙனம்) உனது வடிவத்தைப் பரவச் செய்து வைத்துள்ளாய்
இணங்கும் நின்னோரை இல்லாய், Inangum Ninnorai Illai - உன்னோடு இணைத்துச் சொல்லத்தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!
நின் கண், Nin Kan - உன்னிடத்திலேயே
வேட்கை, Vedkai - பக்தியை
எழுவிப்பன், Ezhuvippan - வரைச்செய்வேன்
2574திருவிருத்தம் || 97
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு, எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால், இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய், தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும், உண்டோ கண்கள் துஞ்சுதலே?
எழுவதும், Ezhuvadhum - ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும், Meende Padivadhum - மறுபடி அஸ்தமிப்பதையும்
பட்டு, Pattu - இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள், Ennai Oozhigal - எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும், Poi Kazhithalum - சென்று கழிவதையும்
கண்டு கண்டு, Kandu Kandu - பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால், El Kal Allal - வருந்துதலே யல்லாமல்
இமையோர்கள் குழாம், Imaiyorkal Kuzham - தேவர்கள் கூட்டம்
தொழுவதும், Thozhivadhum - வணங்குவதையும்
சூழ்வதும், Sozhvadhum - (பரிவாரமாக,) சூழ்ந்து கொள்வதையும்
செய், Sei - செய்யப் பெற்று
தொல்லை மாலை, Thollai Maalai - ஆதியந்தம் இல்லாதவனான திருமாலை
கண் ஆரக் கண்டு, Kan Aarak Kandu - கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து
கழிவதோர் காதல் உற்றார்க்கும், Kazhivadhor Kaadhal Utrarkkum - (அவன் பக்கல்) மிக்க ஒரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்
கண்கள் துஞ்சுதல், Kangkal Thunzhuthal - கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ, Undo - உள்ளதோ? (இல்லை என்ற படி.)
2575திருவிருத்தம் || 98
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.
துஞ்சா முனிவரும், Thunjaa Munivarum - கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும் (- (இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்))
அல்லாதவரும், Allaadavarum - தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று, Thodara Nindru - பின்பற்றி வழிபடநிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான், Enjaa Piravi Idar Kadivaan - (அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத, Than Saarvu Ilaadha - தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன், Thaniperum Moorthi Than - ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ªணேய் ஊண் என்னும் ஈனம் சொல், Vennaeney Oon Ennum Eenam Sol - வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழிசொல்லுக்கு இடமான
மாயம், Maayam - ஆச்சரியம்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது, Sevvae Nenjaal Ninaippu Aridhu - நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.
2576திருவிருத்தம் || 99
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே
ஈனம் சொல் ஆயினும் ஆக, Eenam Sol Aayinum Aaga - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம், Eri Thirai Vaiyam Muttram - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
எனத்து உரு ஆய் கிடந்த, Enathu Uru Aay Kidandha - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த
பிரான், Piraan - தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும், Iru Karppagam Seer Vaanaththavarkkum - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும், Allaadavarkkum - அவர்களலல்லாத மனிதர்கட்கும்
மற்றுஎல்லாயவர்க்கும், Mattru Ellaiyavarkkum - மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம், Gyaanam - அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால், Piranai Allal - தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை., Naan Kanda Nallathu Illai - நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.
2577திருவிருத்தம் || 100
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே
நல்லார், Nallar - நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில், Navil - புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான், Kurugur Nagarayan - திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால், Thirumaal - லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர், Thiruper - திருநாமங்களை
நல்லார், Nallar - பயின்றவரான அடியார்களுடைய
அடி, Adi - திருவடிகளாகிற
கண்ணி, Kanni - பூமாலையை
சூடிய, Soodiya - தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன், Maran - நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த, Vinnappam Seitha - (பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல், Sol Ar Thodaiyal - சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும், I Noorum - இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள்
பிறப்பு ஆம், Pirappu Aam - ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை, Pollaa Aruvinai - கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல், Maayam Val Seeru Allal - கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய
பொய் நிலத்து, Poi Nilaththu - பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார், Azhundhaar - அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.)