திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2479 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2479திருவிருத்தம் || தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் – நாயகிக்கு உண்டான வை லக்ஷண்யத்தைத் தோழியானவள் கண்டு ஆச்சர்யப்பட்டு பேசுகிறாள் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வாருக்கு உண்டான அன்பு மிகுதியால் கண் கலக்கத்தைக் கண்டு பகவத் விஷயத்திலே இப்படியும் ஒரு அபி நிவேசம் உண்டாவதே என்று வியப்புற்ற பாகவதர்கள் வார்த்தை 2
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம் தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
பதவுரை Show / Hide
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன், Muzhu Neer Mukil Vannan Kannan - நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே, Moodhuvar Aam Vinnattavar Thozhneer Inai Adikke - (யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய, Anbu Soottiya - தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு, Sool Kuzharku - அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து, Sezhuneer Thadathu - மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல், Kayal - கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப, Milirndhaal Oppa - பிறழ்ந்தாற் போல
சே அரி கண், Sae Ari Kann - சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப, Azhuneer Thulumb - (நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன, Alamarugirathin - தடுமாறுகின்றன;
வாழி, Vaazhi - இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)