திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2480 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2480திருவிருத்தம் || கருடாரூடனாக சேவை சாதிக்க -பெரிய திருவடி செய்த போக்யமே போக்யம்–சதா திருமாலை ஏந்திச் செல்கிறான் என்று ஆழ்வார் திரு உள்ளம் பெரிய திருவடி பின்னே பரம பதம் வரை சென்று -பிராட்டிமார் உடன் சேர்த்தி அழகைக் கண்டு மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பதைக் கண்ட பின் —தொடருவதால் அவனது குளிர்ச்சிக்கு காரணம் என்பதாலும் நிழல் தம்மில் ஒருவர்க்கு ஒருவர் நிழல் என்றுமாம் – அடியார்க்கு நிழல் போல்வனர் என்றுமாம் — 3
குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
பதவுரை Show / Hide
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து, Azhai Pol Adum Chakrathu - (அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல், Annal - எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும், Vinnor Thozha Kadavum - மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த, Thazhal Pol Sinath - பள்ளின் பின்போன
தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர், Kuzhalkovalar - புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும், Madham Pavaiyum - குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும்
திருவும், Thiruvum - பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர், Nizhal Polvannar - (எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல், Kandu Nirkol - பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல், Meelum Kol - திரும்பி வருமோ?