திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2482 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2482திருவிருத்தம் || மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் – என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர – மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் -வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே 5
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே
பதவுரை Show / Hide
பனிப்பு இயல்பு ஆக உடைய, Panippu Iyalthbu Aaga Udaiya - குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றானது
இ காலம், I Kaalam - இப்போது மாத்திரம்
இ ஊர், I Oor - இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து, Panippu Iyalthbu Ellam Thavirthu - குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய், Am Thannam Nuzhai - அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக (ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும், Pani Puyal Soorum - மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும், Eri Veesum - வெப்பத்தை வீசுகின்றது; (இவ்விதமாக)
பனி புயல் வண்ணன், Pani Puyal Vannan - குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல், Sengkol - (என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது, Oru Naantru Thadaviya - இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி, Thada Kanni - பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும், Maamai Thirathu Kollum - மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்