| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2483 | திருவிருத்தம் || ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவருக்கு வசப்படாமல் தப்பித் பிழையுங்கோள்-என்று பாகவதர்கள் ஆழ்வார் பிரபாவம் சொல்கிறார்கள் – அனைவரும் ஸ்வதந்தர்களாக இல்லாமல் அநந்யார்ஹர் ஆவார்கள் பிரசித்த மன்மதன் மிருத்யுவைத் தப்பினாலும் -இப்படி மிருதுவாய் தோன்றினாலும் இவருக்கு தப்ப முடியாதே 6 | தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே | இது, Idhu - இவ்வடிவானது தடாவிய, Thadaviya - வளைந்த அம்பும், Ambum - பாணங்களையும் முரிந்த, Murindha - ஒடிந்த சிலைகளும், Silaigalum - விற்களையும் போக விட்டு, Poga Vittu - கொள்ளாமல் ஒழித்து கடாயின கொண்டு, Kadayin Kondu - உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற வல்லி எனும், Valli Ennum - ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும் அசுரர் மங்க, Asurar Manga - அஸுரர்கள் அழியும்படி கடாவிய, Kadaviy - ஏறி நடத்தப்படுகின்ற வேகம், Vegam - விரைவையுடைய பறவை, Paravai - பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு இன் பாகன், In Paagan - இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற) மதனன், Madhanan - மன்மதனுடைய செங்கோல், Sengkol - ஆளுகையை நடாவிய, Nadaviya - நடத்துகிற கூற்றம், Koottam - யமனாயிருக்கும்; ஞாலத் துள்ளே, Naalath Thulle - இந்நில வுலகத்திலே கண்டீர், Kandeer - (இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே! உயிர் காமின்கள், Uyir Kaaminngal - (உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள் |