திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2484 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2484திருவிருத்தம் || கால மயக்கு – காலம் மறைத்து உரைத்தல் இது என்பர் திருக்கோவையாரில் 7
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
பதவுரை Show / Hide
ஞாலம் பனிப்ப, Njaalam Panippa - உலகம் நடுங்கும்படி
செறித்து, Seriththu - தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு, Nal Neer Ittu - (தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து, Kaal Sithaindhu - கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு, Neelam Val Aeru - கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற, Poraa Nindra - போர் செய்யப் பெற்ற
வானம் இது, Vaanam Ithu - ஆகாசமாகும் இது;
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
கோலம் சுமந்து, Kolam Sumandhu - வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு, Pirindhaar Kodumai Kuzhru - பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ, Than Poo Kaalam Kol O - குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன், Vinaiyaattiyeen - தீவினையுடைய நான்
காண்கின்ற, Kaankindra - காண்கின்றவற்றை
அறியேன், Ariyyeen - இன்னதென்று அறிகிற வில்லை.