திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2486 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2486திருவிருத்தம் || கையும் திருவாழியுமான சேர்த்தியால் உண்டான அழகுடன் ஸ்ரீ வைகுண்டம் போலே சேர்ந்தவர் மீள ஒண்ணாத எல்லை இல்லா ஆனந்தம் கொடுக்கும் பராங்குச நாயகி 9
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
பதவுரை Show / Hide
திண், Thin - வலிய
பூ, Poo - அழகிய
சுடர், Sudar - ஒளியுள்ள
நுதி, Nuthi - கூர்மையை யுடைத்தான
நேமி, Nemi - திருவாழியை யுடைய
அம் செல்வர், Am Selvar - அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய, Vin Naadu Anaiya - பரமபதத்தை யொத்த
வண் மணி பூ, Van Mani Poo - அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை (ஏனெனில்;)
இவையோ கண், Ivaiyo Kan - இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம், Poo Kamalam - தாமரை மலர்களாய்
வண் பூ குவளை, Van Poo Kuvalai - அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ், Maa Idazh - பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி, Karud Sudar Aadi - கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி, Ven Muthu Arumbi - (நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற, Madamaan Vizhikkindra - மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.