திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2487 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2487திருவிருத்தம் || தோழியை சில வார்த்தைகள் சொல்லி உடன்பட வைக்கின்றான் – மதி யை உடம்படுத்தல் -துறை 10
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள் நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே
பதவுரை Show / Hide
மாயோன், Maayon - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட, Vadathiruveengadam Naad - வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள், Valli Kodikaal - பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி, Adhu Andri - அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும், Vallinaiyenum Kiliyum Elgum - கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ, Aayo - (உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ, Thondaiyo - கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர், Noi O Uraikkilum Kaetkindraileer - (என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
அடும், Adum - (என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது, Idhu Arivu Aridhu - இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர், Uraiyeer - நீங்கள் சொல்லுங்கள்; (அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)