திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2489 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2489திருவிருத்தம் || நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றாமையைக் கூறி நெஞ்சோடு கலாய்த்தல் அன்றியே பாங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையை சொல்லுகிறாள் ஆகவுமாம் 12
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய் சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே
பதவுரை Show / Hide
மணி மாமை, Mani Maamai - (எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது, Paerkindrathu - விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை, Pirangi Allal Payalai - விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது, Oorkindrathu - மேன் மேல் பரவா நின்றது;
கங்குல், Gangul - இராப் போது
ஊழிகளே, Oozhigalai - அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே, Idhu Ellam Inave - இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து, Eerkkindra Chakkarathu - (கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன், Emperumaan Kannan - எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற, Saarkindra - ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார், Nal Nenjinnaar - (எனது) நல்ல மனம்
தந்து போன, Thandu Poana - (தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே, Thani Valame - ஒப்பற்ற செல்வங்களாம்.