திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2490 | திருவிருத்தம் || நாயகனைப் பிரிந்து ஆற்ற மாட்டாத நாயகி இருளுக்கும் வாடைக்கும் கஷ்டப் பட்டுக் கூறும் பாசுரம் இது இந்திரியங்கள் பகலிலே பகலிலே பலவகைப்பட்ட பொருள்களை நாடி இருக்கக் கூடி இருக்குமாதலால் நாயகன் பிரிவை ஒரு விதமாக ஆறி இருக்கலாம் இரவில் மனம் அவனையே நாடி இருப்பதாலும் கலவிக்கு உரிய காலமாதலாலும் இராப்பொழுதிலே ஆற்ற மாட்டாது இருப்பது இயல்பே இப்பராங்குச நாயகியும் அவ்வாறே வருந்துகிறாள் என்க 13 | தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே | பதவுரை Show / Hideதனி வளர், Thani Valar - ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள செங்கோல், Sengkol - (தனது ஒளியாகிய) அரசாட்சியை ஈடாவு, Eedaavu - (எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற தழாய்வாய் அரசு, Thazhaivai Arasu - வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன் அவிய, Aviya - ஒழிய பனி வளர் செங்கோல் இருள், Pani Valar Sengol Irul - (ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு பார் முழுவதும், Paar Muzhuvadhum - பூமி முழுவதும் வீற்றிந்தது, Veetrindhadhu - அரசு வீற்றிருந்தது; இனி, Ini - இனி மேல், நுனி வளர் காதல், Nuni Valar Kaadhal - துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான துழாயை, Thuzhaai - (தலைவனது) திருத்துழாய் மாலையை துழாவு, Thuzhaavu - அளைந்து வருகிற தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றை தடிந்து, Thadinthu - தண்டித்து (அழித்து) வளை, Valai - (பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை காப்பவர், Kaappavar - கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர். ஆர், Aar - யாருளர்? (எவருமில்லை.) ஊழிகள், Oozhigal - (கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள் எனை, Enai - என்னை ஈர்வன, Eirvan - விளக்குந்தன்மையுடையன. |