திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2492 | திருவிருத்தம் || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவதாரிகை- இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து கிட்ட கடவதாக குறி வர விட்டு போய், கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே கிட்டினவன்,,இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண, அவர்களும் அத்தை கொண்டு,இவர் வருவதாக போன படிக்கும்,வந்த படிக்கும், இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்.. இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே ,ஆனை வேட்டையை வினவி கொண்டு, செல்ல கடவதாக நினைக்கிறான்,.. பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே , இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்- 15 | கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே | பதவுரை Show / Hideகளிறு வினவி, Kaliru Vinavi - யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;, Kayalo Numa Kangal Endru Nitrir - ‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்; அயலோர் அறியிலும், Ayalor Ariyilum - அயலார் அறிந்தாலும் ஈது என்ன வார்த்தை, Eethu Enna Vaarthai - இது என்ன பொருந்தாத வார்த்தை; கடல் கவர்ந்த, Kadal Kavarndha - கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் புயலோடு உலாம், Puyalodu Ulaam - மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான கொண்டல், Kondal - காளமேகம் போன்ற வண்ணன், Vannan - (குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது புனம் வேங்கடத்து, Punam Vengadathu - (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே கொல்லை காக்கின்ற நாளும் பல பல, Kollai Kaakkinra Naalum Pala Pala - (நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் எம்மோடும் பயலோ இலீர், Emmodum Payalo Ilir - எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர். |