திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2493 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2493திருவிருத்தம் || நாயகனோடு கூடி இருந்து பிறகு விதி வசத்தால் பிரிந்த நாயகி -அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய் இராப்பொழுதைக் கடக்க மாட்டாமையைத் தோழிக்கு உரைக்கிறாள் நித்ய சம்ஸ்லேஷ அபி நிவேசத்தை வெளியிட்ட படி அன்றிக்கே கலந்த ஸம்ஸ்லேஷத்தின் தன்மையைத் தோழி வினவ பிரிந்த போது காலம் நெடுக்குவது போல் கூடிய பொது காலம் குறுகின படி என்னே என்று கலவியின் சிறப்பைச் சொன்னபடி – நீங்கில் ஊழியாயிடும் -கூட்டில் நாழிகை கூறாயிடும் -என்று மாறிச் சென்று அந்வயிப்பதால் எதிர் நிரல் நிறைப்பொருள் கோள் மொழி மாற்று நிரல் நிறை மயக்க நிரல் நிறை –என்பதுவும் இதுவே 16
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய் பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே
பதவுரை Show / Hide
கண்ணன் விண் அனையாய், Kannaan Vin Anaiyaai - எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம், Pala Pala Vazhigal Aayiram - (நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி, Andri - அதுவல்லாமல் (நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும், Oru Naazhikayai Palapala Koordu Ittu Koordu Aayidum - ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர், Anbar - நாயகர்
பல பல நாள் கூடினாலும், Pala Pala Naal Koodinaalum - பல பல நாள் கூடிநின்றாலும் (காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும், Yaam Melithum - யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும், Anbar Pala Pala Naal Neenginaalum - (நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்), Kaalam Mika Valarthal - (காலம் மிக வளர்தலால்)
யாம் மெலிதும், Yaam Melithum - யாம் மிக வருந்துகிறோம்; (ஆதலால்)
இ பாய் இருள், I Paai Irul - இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து, Pala Pala Soozhal Udaithu - சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து, Pala Pala Soozhal Udaithu - அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)அந்தோ! வாழ்க.