| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2494 | திருவிருத்தம் || முன்பு ஸ்ரீ ராமபிரான் வனவாசம் யாத்ரை புறப்பட்ட பொழுது உடன் சென்ற அயோத்யா நகர ஜனங்கள் அறியாத படி தேர் ஏறிச் சென்றால் போல் இங்கு மறைத்துப் போகாமல் போன வழி தெரியும் படி போனதே இவ்விடத்துக்கு வாசி – 17 | இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே | இருள விரி, Irula Viri - இருளை வெளியுமிழ்கிற நீலம், Neelam - நீலரத்தினம் போன்ற கரு, Karuv - கருமை நிறமுடைய ஞாயிறு, Nyaayiru - ஸூர்யமண்டலமென்று சுடர் கால்வது போல், Sudar Kaalvathu Pol - ஒளி வீசுவது போல, இருள் விரி சோதி பொருள், Irul Viri Sothi Porul - கருமை நிறம் அரவணைமேல், Aravanaimeel - சேஷ சயனத்தின்மேல் உறையும், Urayum - நித்யவாஸம் செய்யப்பெற்ற எறி கடலே, Eri Kadaley - அலை வீசுகிற கடலே! வாழி, Vaazhi - வாழ்வாயாக: இருள் விரிந்தால் அன்ன, Irul Virindhaal Anna - இருள் பரப்பினாற்போன்ற மா நீர் திரை கொண்டு, Maa Neer Thirai Konda - கருத்த நீரையுடைய அலைகளால் இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல், Irul Pirindhaar Anbar Ther Vazhithooral - இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக |