திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2495 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2495திருவிருத்தம் || ஸ்ரீ நம்பிள்ளை அவதாரிகை கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்து போனானாய் -முக்காலமும் வந்து இவன் வாராது ஒழிய – அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக் கண்டு தோழியானவள் அவன் வரும் அளவும் இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் - 18
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
பதவுரை Show / Hide
கடல்கொண்ட, Kadal Konda - கடலளவினதான
கண்நீர் அருவி, Kannir Aruvi - கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும், Seyyaa Nirkum - செரிந்து நிற்கிற
காரிகையே, Kaarikaye - அழகிய நங்காய்!
வானம், Vaanam - ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது, Kadal Konda Ezhunthathu - கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல், Kadal - அக் கடல்தான்
அன்றி, Andri - (அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால், A Vaanaththai Sendru Kondu Ozhintha Adhanal - ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது, Idhu - இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும், Kannaan Mannum Vinnum - எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ, Kadal Kondo Ezhuntha Akalam Sol O - பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ, Puyal Kaalam Kol O - மழைக்காலந்தானோ? (அறியேன்.)