திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2496 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2496திருவிருத்தம் || செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை இன்ன காலத்திலேயே வருகிறேன் என்று சொல்லிப் போன நாயகன் வாக்குத் தவறிதற்கு ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்கு செவிலித்தாய் இரங்கல் அழகிய மணவாள சீயர் உரையில் பாங்கி பழிக்கு இரங்கின பாசுரம் என்பர் நம்பிள்ளையும் பெரிய வாச்சான் பிள்ளையும் தாய் பாசுரமாகவே வியாக்யானம் செய்து இருப்பதாலும் என் சின் மொழிக்கு -என்று தனது உடைமையாக கூறி உள்ளதாலும் தாய் பாசுரமாகவே கொள்ள வேண்டும் 19
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார் சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே
பதவுரை Show / Hide
காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று, Kaarikayaar Niraikaapavar Yaar Endru - ‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி, Maari - மேகங்கள்
கார் கொண்டு, Kaar Kondu - கருமை நிறங்கொண்டு
இன்னே, Innae - இவ்வாறு
கை ஏறி, Kai Aeri - ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும், Arai Idum Kaalaththum - அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர், Saarikai Pullar - விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய், Am Thannam Thuzhai - அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார், Kooi Irai Arulaar - (இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை; (ஆகவே)
என் சில் மொழிக்கு, En Sil Mozhikku - சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது, Seyari Kai Aeri Mpalzi Aayi Vilainthathu - (அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
வாழியரோ, Vaazhi Yaro - இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.