| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2497 | திருவிருத்தம் || வெறி விலக்கு துறை பாசுரம் தீர்ப்பாரை யாம் இனி -திருவாய் மொழி பாசுரம் போல் உலகமுண்ட பெரு வாயனின் திரு நாமங்களை செவிப்படுமாறு சொல்வதும் அவன் திருத்துழாயைத் தருவதும் பரிஹாரம் இது தெய்வ நல் நோய் -என்கிறாள் தோழி 20 | சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான் சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே | சில் மொழி நோயோ, Sil Mozhi Noyoo - சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால் இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது, I Noy Inathu Endru Ilmozhi Kaetkuma In Deivam Andru Ithu - இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று, Illadha Mozhigalai Padaitthu Sollak Kaetkathakka Kshudhradeivaththin Vishayamaaga Vandhadhandru - இது வேல, Vela - வெறியாட்டாளனே! நீ நில், Nee Nil - நீ விலகி நிற்பாயாக; எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே, Em Ammanaimeer Enathu Thaimaarkale - எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே என் மொழி கேண்மின், En Mozhi Kainmin - (இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்; கழிபெருந் தெய்வம், Kazhiperun Theivam - மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது. ஏழு உலகும், Ezhu Ulagum - எல்லாவுலகங்களையும் உண்டான், Undaan - (பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது. சொல் மொழிகொண்டு, Sol Mozhikondru - திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு மாலை அம் தண்ணம் துழாய், Maala Am Thannam Thuzhai - (அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை சூட்டுமின், Sootumin - (இவளுக்குச்) சூட்டுங்கள் |