| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2498 | திருவிருத்தம் || தாமான தன்மையில் கிருஷ்ண அனுபவம் என்றே நம்பிள்ளை போல்வார் வியாக்யானித்து அருளுகிறார்கள் ஸ்நாநாசனம் அலங்காராஸனம் நித்ய விபூதியில் போஜ்யா ஸாஸனம் சயனா ஆஸனம் இங்கு தர்மி ஐக்யம் உண்டே 21 | சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர் ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன் கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே | அங்கு, Angu - பரமபதமாகிற அவ்விபூதியில், விண்ணோர்கள், Vinnorkal - நித்யஸூரிகள் நல் நீர் ஆட்டி, Nal Neer Aatti - நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து அம் தூபம் தரா நிற்க, Am Thoopam Tharaa Nirka - அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க, (அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே) ஓர் மாயையினால், Oru Maayaiyin Aal - (உனது) ஒப்பற்ற மாயவகையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து, Eetiyavenney Thodu Unna Pothu - (இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள்தோறும் கடைந்து) சேர்ந்தவெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி, Thuyana Sootu Nal Maalaigal Aendhi - பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்கஅழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நின்று அடல் ஆயர்தம் கொம்பினுக்கு, Adal Aayartham Kombinukku - வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்றமகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக இமில், Imil - முசுப்பையுடைய ஏறு, Eru - (ஏழு) எருதுகளினுடைய வல் கூன் கோட்டிடை, Val Koon Kottidai - வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்து ஆடினை, Koothu Aadinai - கூத்தாடி யருளினாய். |