திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2499 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2499திருவிருத்தம் || காந்தர்வ விவாஹ முறையினால் நாயகியைப் புணர்ந்து பிரிந்த நாயகன் பின்பு தோழியின் மூலமாக நாயகியைச் சேர விரும்பி அத்தோழியைத் தனியே கண்டு தான் கருத்தை வெளிப்படையாகக் கூறி வேண்டிக் கொள்ளாமல் குறிப்பாக கூறக் கருதி புனம் காக்கும் இடத்தில் தழையும் கண்ணியுமாக கையுறைகளை ஏந்திக் கொண்டு சென்று அவர்களை நோக்கி வேட்டை யாடுபவன் போல் எனது அம்போடு ஒரு மத யானை இவ்விடத்து வரக் கண்டது உண்டோ என்று வினவ அவனைப் பரிஹஸித்து தோழி நாயகியிடம் கூறும் பாசுரம் 22
கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு அம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர் தம்பாரகத் தென்று மாடாதன தம் மிற்கூடாதன வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
பதவுரை Show / Hide
ஐயர், Aiyar - இப்பெயரிவருடைய
கை, Kai - கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை, Kombu Ar Thazhai - மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம், Siru Naan Erivu Ilam - (இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்) தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு, Kondaadu - (இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை, Vettai - வேட்டையாம்;
வினவுவது, Vinavuvathu - (இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு, Ambu Ar Kaliru - (எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்; (இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதனை, Pun Oorum Kalvar Tham Paar Agathu Endrum Aadaadhana - கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினதுஉரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென, Thammil Koodaadena - தமக்குள் ஒன்றொடொன்று பொருத்தமில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ, Vambu Ar Vinaa Sollavoo - புதுமைமிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை, Emmai - நம்மை
இவ் வான் புனத்தே வைத்தது, Iv Vaan Punatthae Vaiththathu - இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைதத்து?