| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2500 | திருவிருத்தம் || கொல்லையைக் காத்துக் கொண்டு இருக்கும் நாயகியையும் தோழியையும் கண்டு நாயகன் தனது குறை வேண்டுதலைக் கூறும் துறை இது தம் மனம் இவர்களுக்கு வசப்பட்டத்தைக் குறிப்பால் கூறியவாறு நீங்கள் புனத்தை விட்டுப் போகாமல் இருப்பது போல் என் மனத்தை விட்டு நீங்குகிறது இல்லை புனம் போல் என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறது உங்கள் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ என் மனத்தைக் காக்கவோ புனக்காவலோடே நில்லாமல் என் மனம் காப்பது உங்களுக்குத் தகுதி அன்று – அவர்கள் அழகைத் தான் காணும் பொருட்டும் தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும் இவர்கள் அருகில் தடுமாறி திரிந்தமை தோற்ற புனத்தயலே வழி போகும் அரு வினையேன் என்கிறார் 23 | புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன் மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே | மகளிர், Mahalir - பெண்களே! நும் காவல், Num Kaaval - உங்கள் காவலுக்கு உரிய பொருள் புனமோ, Punamo - இந்தத் தினைப் புனமோ? (அல்லது) புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ, Punathu Aayale Vazhiy Pogum Aruvinaiyen Manamo - இப் புனத்தினருகிலே வழிச் செல்லுகிற பரவியேனான என்னுடைய நெஞ்சமோ? சொல்லீர், Sollir - சொல்லுங்கள்; புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான், Pundareekathu Amkezh Vanam Oru Anai Kannaaan - செந்தாமரை மலரின் அழகிய ஒளியையுடைய காட்டைஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய கண்ணன், Kannan - கண்ணபிரானது வான் காடு, Vaan Kaadu - பரமபதத்திலே அமரும், Amarum - வாஸம் பண்ணுகிற தெய்வத்து இனம், Deivathu Inam - நித்யஸூரி வர்க்கத்தினர் ஓர் அனையீர்கள் ஆய், Oru Anaiyeergal Aay - ஒருபுடை ஒத்தவர்களாய் நும் இயல்புகள், Num Iyalkugal - நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள் இவையோ, Ivaiyo - அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ? |