திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2501 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2501திருவிருத்தம் || பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது – எனது மகள் கண் கலக்கமுற்றாள் நெஞ்சம் அழியப் பெற்றாள் இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள் – 24
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய் கொயல்வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம் கொல் எம் கோல வளைக்கே
பதவுரை Show / Hide
இயல்பு ஆயின, Iyalthu Aayina - இயற்கையானதும்
வஞ்சம், Vanjam - பிறரறியாதபடியுள்ளதுமான
நோய், Noi - காதல் நோயை
கொண்டு, Kondhu - உடையவையாய்
உலாவும், Ulaavum - (ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும், Oru Kudangai Kayal Paayvan Peruneer Kangkal Thammoodum - ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய், Puyal Vaai - (முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால், Kundram Ondraal - கோவர்தன மலையினால்
இனம் நிரை காத்த, Inam Nirai Kaatha - பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி, Pul Oorthi - கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய், Kal Oorum Thuzhai - தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல், Koyal Vaai Malarmel - பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு, Manaththodu - மனத்தோடும்
எம் கோல் வளைக்கு, Em Kol Valaikku - அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?