திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2502 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2502திருவிருத்தம் || இவளை ரக்ஷிக்கா விடில் அவன் செங்கோலுக்கும் குறை ஆகாதோ – தலை மகள் வார்த்தை யாகவும் தாய் வார்த்தையாகவும் அவனே வாராமல் இருந்து தன் செங்கோலுக்கு வளைவை உண்டாக்கின பின்பு திருத் துழாய் என்ன செய்ய மாட்டாது என் வளை நிமித்தமாக இவனே அழிக்கத் தொடங்கினால் வேறே ரஷிப்பார் உண்டோ தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை அம்மான் -நம் கோன் உகக்கும் துழாய் – 25
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன் நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே
பதவுரை Show / Hide
திறல் சேர், Thiral Ser - வலிமை பொருந்திய
அமரர் தம், Amarar Tham - தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய, Konudaiya - தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள், Thamkol - தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன், Umbar Ella Yavarkkum Thamkon - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள், Nam Kol - (இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும், Ugakkum - விரும்பித் தரித்துள்ள
துழாய், Thuzhai - திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ, Em Kolvalai Mudhal Aa - எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும், Kannaan Mannum Vinnum Alikkum Chengol Valaivu Vilaivikkum - அப்பெருமானது உபய விபூதியையும்பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி, Ini - இங்ஙனமான பின்பு,
நானிலத்து, Naanilathu - இவ்வுலகத்தில்
என் செய்யாது, En Seyyaadhu - (அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.