திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2503 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2503திருவிருத்தம் || நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம் 26
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம் பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே
பதவுரை Show / Hide
நால்நிலம், Naalnilam - (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு, Vaikondru - (தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று, Nanneer Aramendru - ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட, Kothu Konda - அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன், Venil Am Selvan - வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ், Suvaithu Umizh - உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை, Palai - பாலை நிலத்தை
கடந்த, Kadandha - தாண்டி வந்த
பொன்னே, Ponne - பொன் போன்றவளே!.
விண்ணோர், Vinnor - மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும், Kaalnilam Thoyndhu Thozhum - (நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படிஇங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா, Kannan Vekha - கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது, Uthu - அடுத்துள்ளது.
அம் பூ தேன், Am Poo Then - அழகிய பூவையும் தேனையுமுடைய
இள, Ila - இளமை மாறாத
சோலை, Solai - சோலையானது
அப்பாலது, Appaaladhu - அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது, Eppalaikkum Semaththadhu - (எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.