திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2504 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2504திருவிருத்தம் || திருத் துழாய் மாலையை தரித்து -முன்பு நலிந்த வாடை இப்பொழுது தணிந்ததே – தலைவன் உடன் கலந்த அனுபவம் என்றுமாம் சேமம் செங்கோன் அருளே விசுவாசம் பிறக்கவே பகைவரும் நண்பர் ஆவார் அவன் குண விசேஷங்களில் ஆழ்ந்து உலக பொருள்கள் துன்பம் தவிர்ந்தமை சொல்கிறது 27
சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய் யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே
பதவுரை Show / Hide
செம் கோன் அருளே, Sem Kon Arule - (எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம், Semam - நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும், Pandhu Ellam Arai Kooyi Yamangal Thoru Eri Veesum - முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று, Seruvaarum Natpu Aaghuvar Endru - பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற, Emam Pera - உறுதி பொருந்த
வையம் சொல்லும், Vaiyam Sollum - உலகத்தோர் கூறுகிற
மெய்யே, Meyye - உண்மைமொழியின் படியே,
அ வாடை, A Vadai - அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய, Nam Kannan Amthannam Thuzhai Thamam Punaia - நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது, Eetho Vandu Thanneerndathu - இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.