திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2505 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2505திருவிருத்தம் || 28
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன
பதவுரை Show / Hide
வள்வாய் அலகால், Valvai Alagal - கூர்மையான வாயின் நுனியினால்
புள், Pul - பறவைகள்
நந்து உழாமே, Nandhu Uzhaame - (தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி
பொரு, Poru - அலைமோதுகிற
வளை கொள்வது, Valai Kolvathu - (எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம், Yaam - (உன்பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம், Izhappom - வளையை இழக்கிறோம்; (இப்படியிருக்க)
ஓர் வாடை, Oor Vadai - (எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே, Naduvae - இடையே பிரவேசித்து
நீர், Neer - காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா, Thiru Arangaa - ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும், Vannam Thuzhaavi Ulaavum - (எமது) நாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக்கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய், Arulai - (அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ, Pandhum Innanna Ulavoo - முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?