திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2506 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2506திருவிருத்தம் || நாயகி அன்னப் பறவையை வெறுத்து உரைக்கும் பாசுரம் -அன்னமோடு அழிதல் துறை 29
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே
பதவுரை Show / Hide
குடிசீர்மை இல், Kudiseirmai Il - உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள், Annangal - இவ்வண்ணப் பறவைகள் (எனன் செய்கின்றனவென்றால்)
இவள், Ival - ‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு, Aal Attram Pattu - (வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது, Innanth Thoodhu - இப்படிப்பட்ட தூதராக
எம்மை, Emmai - நம்மை
இரந்தாள் என்று, Irandhaal Endru - குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா, Annanth Sollaa - அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும், Pedaidodum Poivarum - (தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன; (இதற்குக் காரணம்)
நீலம் உண்ட, Neelam Unda - நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன, Min Annan - மின்னல்போன்ற
மேனி, Meni - திருமேனியை யுடைய
பெருமான், Perumaan - எம்பெருமானுடையதான
உலகில், Ulagil - உலகத்தில்
பெண் தூது செல்லா, Pen Thoodhu Sellaa - பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ, Annanth Neermai Koloo - அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?