திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2507 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2507திருவிருத்தம் || எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும் அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறார் 30
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே
பதவுரை Show / Hide
அன்னம் செல்வீரும், Annam Selveerum - (வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும், Vandaanam Selveerum - (அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன், Thozhudhu Irandhen - யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன் (என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ, Munnam Selveergal Maravenminoo - உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு, Kannan Vaikundhanodu - கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால், En Nenjinaraik Kandaal - (முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி, Ennaich Solli - (அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ, Avaridai Neer Innamm Sollirow - அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ, Idhu Thagavoo - இது தகுதியோ?
என்று இசைமின்கள், Endru Isaimingal - என்று சொல்லுங்கள்