திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2508 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2508திருவிருத்தம் || வானத்தில் பறந்து செல்லும் அன்னம் முதலியவற்றைப் பரமபத நாதனுக்குத் தூதாகவும் மேகங்களை திருவேங்கடமுடையான் இடம் தூது விடுகிறாள் 31
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
பதவுரை Show / Hide
அம்பொன், Ambon - அழகிய பொன்னும்
மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்களும்
திசை, Thisai - திக்குகள் தோறும்
மின் மிளிரும், Min Milirum - மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து, Thiruveengadathu - திருவேங்கட மலையினது
மேகங்கள், Megangal - மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால், Thuthu Isaimingal Endru Isaitthal - (நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம், Isaiyilam - (அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை, Valthal Simayam Misai - வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான், Min Miliriyap Povan - மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட, Vazhikonda - பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால், En Thalaimel Asaimingal Endraal - நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம், Asaiyum Kol Aam - (அவை அங்குச்) செல்லக் கூடுமோ?