திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2509 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2509திருவிருத்தம் || பொய்கையார் – மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் – கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் 32
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே
பதவுரை Show / Hide
மேகங்களே, Megangalai - ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள், Thirumal Thirumeni Okkum Yogangal - எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர், Ungalukk Ev Aaru Pettrir - உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்;
உயிர், Uyir - உயிர்களை
அளிப்பான், Alippan - பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து, Nal Neergal Sumandhu - நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து, Maa Kangal Ellam Thirinthu - பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம், Num Tham - உங்களுடைய
ஆகங்கள் நோவ, Aakangal Nova - உடம்புகள் நோகும்படி
வருந்தும், Varundum - (அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம், Thava Aam - தபஸ்ஸோ
அருள் பெற்றது, Arul Pettrathu - (அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.