திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2510 | திருவிருத்தம் || 33 | அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே | பதவுரை Show / Hideஅரவு அணையீர், Aravu Anaiyeer - ஆதிசேஷசயனத்தை யுடையவரே! அருள் ஆர் திரு சக்கரத்தால், Arul Aar Thiru Chakkaraththal - கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு அகல் விசும்பும், Akal Vichumbum - பரந்த விண்ணுலகத்திலும் நிலனும், Nilanum - மண்ணுலகத்திலும் இருள் ஆர்வினை கெட, Irul Aarvinai Keda - இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி (துஷ்ட நிக்ரஹஞ் செய்து) செங்கோல் கடாவுதீர், Chengol Kadaavudheer - உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர். (அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்) இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய மாமை, Maamai - மேனி நிறத்தை சிதைக்கின்றது, Sithaikkindrathu - அழிப்பதானது ஈங்கு, Eengu - ‘இவ்வுலகத்தில் ஓர் பெண்பால், Oor Penpaal - ஒரு பெண்ணைக் காப்பது பொருளோ எனும், Poruloo Ennum - புருஷோத்தமோ’ என்கிற இகழ்வோ, Ikazhvo - அவதாரமோ? (அல்லது) இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ, Ivattrin Puraththal Endru Enno - (உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்குஉள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ? தெருளோம், Theruloam - அறிகின்றிலோம் |