திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2511 | திருவிருத்தம் || 34 | சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே | பதவுரை Show / Hideமாலே, Male - எம்பெருமானே ஆழி, Aazhi - கூடல் வட்டமானது சிதைக்கின்றது, Sithaikkindrathu - காரியத்தைக் கெடுக்கின்றது என்று, Endru - என்ற காரணத்தினால் ஆழியை, Aazhaiya - அக்கூடல் வட்டத்தை சீறி, Seeri - கோபித்து தன் சிறுஅடியால், Than Siruadiyal - தனது சிறிய கால்களால் உதைக்கின்ற, Uthaikkindra - உதைக்கும் படியான மேம்பாடுடனே உனது, Unathu - உன்னுடையதான தண் தார் ததைக்கின்ற, Than Thar Thathaikkindra - வாடாத மலர்கள் நிறைந்த தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயை அணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற, Anivaan Adhuve Manam Aaypathaikkindra - சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற மாதின் திறத்து, Maathin Thirathu - இம்மங்கை விஷயத்தில் செயல் பாலது, Seyal Paalathu - செய்யததக்கதை அறியேன், Ariyyeen - யான் அறிகின்றிலேன். |