திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2512 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2512திருவிருத்தம் || 35
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
பதவுரை Show / Hide
பால் வாய் பிறை பிள்ளை, Paal Vaai Pirai Pillai - அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகியபால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை
ஒக்கலைகொண்டு, Okkalaikondru - தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண், Pagal Izhanda Mel Paal Thisai Pen - ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும், Pulambu Urum - வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால், Ulaku Alandha Maal Paal - உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு, Thuzhaikku - திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு, Manam Udaiyaarkku - ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம், Nalkirtrai Ellam - அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான், Solvan - கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து, Pugunthu - வந்து
இது ஓர் பணிவாடை, Idhu Oru Panivaadai - இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது, Thuzhaagindrathu - (என்மேல்) தடவுகின்றது; அந்தோ!