திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2514 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2514திருவிருத்தம் || 37
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே
பதவுரை Show / Hide
அரு வினையேன், Aru Vinaiyen - அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும், Nedu Kaalamum - வெகு காலம்
கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம், Neel Malai Paatham - நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி, Paravi - வழிபட்டு
பெற்ற, Petra - அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான், Thodungaal Osiyum Idai Inamaan - தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற, Sendra - நடந்துபோன
சூழ்கடம், Sozhkadham - பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர், Kodu Kaal Silaiyar - வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர், Nirai Kaal Uzavar - பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய, Kolaiyil Veyya - கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால், Sudu Kaal - நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர், Ilaignar - இளைவீரர்களது
துடி, Thudi - பறைகள்
படும், Padum - ஒலித்தலாகிற
கவ்வைத்து, Kavvaiththu - ஆரவாரமுடையது.