திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2515 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2515திருவிருத்தம் || 38
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல் குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே
பதவுரை Show / Hide
கடன் ஆயினகள் கழித்து, Kadan Aayinagal Kazhiththu - காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு, Kadham Aayin Pukku - தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால், Tham Kaal Vanmaiyaal - தமது கால்களின் வலிமையால்
பல நாள், Pala Naal - அனேக காலம்
நீர் நிலை நின்ற, Neer Nilai Nindra - நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல், Thavam Ithu Kol - இத் தவத்தினாலேயோ
நீலங்கள், Neelangal - நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி, Kudam Aadi - (கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும், I Mannum - இந்த மண்ணுவகமும்
விண்ணும், Vinnum - விண்ணுலகமும்
குலுங்க, Kulunga - நெகிழும்படி
உலகு, Ulaku - உலகங்களை
அளந்து, Alandhu - அளவிட்டு
நடம் ஆடிய, Nadam Aadiya - (இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான், Perumaan - எம்பெருமானுடைய
உரு ஒத்தன, Uru Oththana - திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.