திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2517 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2517திருவிருத்தம் || 40
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர் ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ
பதவுரை Show / Hide
கோலம், Kolam - அலங்காரத்தையுடைய
பகல், Pagal - ஸூர்யனாகிய
களிறு ஒன்று, Kaliru Ondru - ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய, Kal Puyya - அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த, Kuzham Virindha - திரளாகப் பரந்த
நீலம், Neelam - நீலநிறத்தையுடை
கங்குல், Gangul - இரவாகிய
களிறு எல்லாம், Kaliru Ellam - யானைகளெல்லாம்
நிரைந்தன, Niraindhana - அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர், Ner Izhaiyeer - தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம், Njaalam - பூ தேவிக்கும்
பொன் மாதின், Pon Maathin - ஸ்ரீ தேவிக்கும்
மணாளன், Manaalan - நாயகனான எம்பெருமான்
துழாய், Thuzhai - (தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே, Nangal Soozh Soozharkae - எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து, Aela Punaindhu - தகுதியாகச் சூட்ட
என்னைமார், Ennai Maar - எமது தாய்மார்
எம்மை நோக்குவது, Emmai Nookkavudhu - என்னைப் பார்ப்பது
என்று கொலோ, Endru Koloo - என்றைக்கோ?