திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2518 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2518திருவிருத்தம் || 41
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள் மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே
பதவுரை Show / Hide
என்றும், Endrum - எப்பொழுதும்
புன், Pun - கொடுமை செய்கிற
வாடை இது, Vaadai Ithu - இந்த வாடையை
கண்டு அறிதும், Kandu Aridum - கண்டறிவோம்!
இ ஆறு வெம்மை உருவம், I Aaru Vemmai Uruvam - இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும், Suvadum - குறிப்பையும்
ஒன்றும், Onrum - ஒருவிதத்தாலும்
தெரியிலம், Theriyilam - அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர், Ongu Asurar - வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்னும் வகை, Ponnum Vagai - அழியும்படி
புள்ளை, Pullai - கருடப்பறவையை
ஊர்வான், Oorvan - ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத, Arul Aruladha - தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள், I Naal - இக்காலத்திலே
வன் காற்று, Van Kaatru - வலியவாடையானது
என்னை, Ennai - என்னை
மன்றில் நிறை பழி, Manril Nirai Pazhi - வெளியிலே பரவிநிறைகிற பழிப்பை
தூற்றி, Thoortri - அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும், Ninru Adum - அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது