திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2519 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2519திருவிருத்தம் || 42
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும் என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.
பதவுரை Show / Hide
எம் பிரான், Em Piraan - எம்பெருமானுடைய
கட கண்கன், Kada Kankan - பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும், Mannum Vinnum - மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு, En Kaaru - எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின், Alavu Innum Kaanmin - இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து, Enban Othu - என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த, Vaan Nimirtha - மேலுலகை நோக்கி வளர்ந்த
தன், Than - தன்னுடைய
கால், Kaal - திருவடிகளை
பணிந்த, Panintha - வணங்கின
என்பால், Enpal - என்னிடத்து.
வன் காற்று அறைய, Van Kaatru Araya - பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த, Orungae Marinthu Kidandhu Alarntha - ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால், Menkaal - மெல்லிய நாளத்தையுடைய
கமலம் தடம்போல், Kamalum Thadampol - தாமரைத் தடாகம்போல
பொலிந்தன, Polinthana - அழகுமிக்கு விளங்கின.