திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2521 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2521திருவிருத்தம் || 44
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம் உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும் பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.
பதவுரை Show / Hide
நிறம், Niram - திருமேனி நிறமும் (- (இவை இவை என்று இனனின்னவையென்று))
உயர் கோலமும், Uyar Kolaum - சிறந்த அலங்காரமும்
பேரும், Perum - திருநாமமும்
உருவும், Uruvum - வடிவமும்
அங்கு அங்கு எல்லாம், Angu Angu Ellam - கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி, Ura Uyir Nyanam Sudar Vilakku Aay Nindrathu Andri - மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும், Aram Muyal Nyanam Samayigal Pesilum - தருமமார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய  வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை, Embiran Perumaiyai - எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை, Onrum Per Mudhal Nindrar Illai - ஒருவையாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.